வடக்கு வீதி விஸ்வாமித்ர விஸ்வநாதர் திருக்கோயில், திருவாரூர்
முகவரி :
வடக்கு வீதி விஸ்வாமித்ர விஸ்வநாதர் திருக்கோயில்,
திருவாரூர் நகரம்,
திருவாரூர் மாவட்டம் – 610001.
இறைவன்:
விசுவாமித்திர விஸ்வநாத சுவாமி
இறைவி:
விசாலாட்சி
அறிமுகம்:
திருவாரூர் பெருங்கோயிலின் வடமேற்கு மூலையில் உள்ளது இந்த திருக்கோயில். கையில் கமண்டலத்துடனும், கழுத்தில் ருத்திராட்ச மாலையுடனும் கம்பீரமாகக் காட்சியளிக்கிறார் விசுவாமித்திர மகரிஷி. அருகிலேயே லிங்கம் உள்ளது போல முகப்பில் சுதை செய்துள்ளனர். இறைவனை விசுவாமித்திரர் வழிபட்ட காரணத்தால், இத்தல இறைவனுக்கு விசுவாமித்திர விஸ்வநாத சுவாமி என பெயர் வந்தது. இறைவியின் திருநாமம் விசாலாட்சி கிழக்கு நோக்கி இறைவனும், தெற்கு நோக்கி இறைவியும் தனித்தனி சன்னிதிகளில் காட்சியளிக்கின்றனர். இறைவன் கருவறை வாயிலில் இரு நாகர்கள் உள்ளனர் அருகில் பெரிய விநாயகர் ஒருவர் உள்ளார். சிறிய நந்தி ஒன்று இறைவன் முன்னம் உள்ளது. சிறிய இடத்தில் உள்ள கோயில் தான் ஆனால் சாந்நித்தியம் மிக்கவர் தென்கிழக்கில் இரு சிறிய சன்னதிகள் உள்ளன. இறைவன் இறைவி சன்னிதியை மூன்று முறைச் சுற்றி வந்து, தரிசனம் செய்துவிட்டுச் சென்றால் சில நாட்களிலேயே வேண்டுதலில் முன்னேற்றம் தெரிவதாகக் கூறுகின்றனர் பலன் பெற்றவர்கள்.
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
திருவாரூர்
அருகிலுள்ள இரயில் நிலையம்
திருவாரூர்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி