வடகுடி பூவணநாதர் சிவன்கோயில், தஞ்சாவூர்
முகவரி :
வடகுடி பூவணநாதர் சிவன்கோயில்,
வடகுடி, கும்பகோணம் வட்டம்,
தஞ்சை மாவட்டம்.
இறைவன்:
பூவணநாதர்
இறைவி:
அழகியநாயகி
அறிமுகம்:
கும்பகோணத்தின் தெற்கில் 7 கிமீ தொலைவில் உள்ள திப்பிராஜபுரத்தை ஒட்டி ஓடும் திருமலைராஜன் ஆற்றின் வடகரையில் கிழக்கு நோக்கி 2கிமீ சென்றால் வடகுடி கிராமம் உள்ளது. சிறிய கிராமம், இருக்கும் ஒற்றை தெருவின் கடைசியில் உள்ளது இந்த சிவன்கோயில். பல காலமாக ஒரு கீற்றுகொட்டகையில் இருந்த இறைவன் இப்போது கிராம மக்களின் முயற்சியால் சிறிய அழகிய கோயில் கொண்டுள்ளார். கிழக்கு நோக்கிய கருவறை கொண்ட இறைவன் – பூவணநாதர் இறைவி – அழகியநாயகி தெற்கு நோக்கி உள்ளார். இறைவன் பெரிய அளவிலான லிங்க மூர்த்தி, அம்பிகை புதியதாக உருவாக்கப்பட்டவர். கருவறையை நோக்கி ஒரு ரிஷபம் அமர்ந்துள்ளது. கருவறை வாயிலில் அழகிய பெரிய விநாயகர் உள்ளார். கருவறை கோஷ்ட தெய்வமாக தென்முகன் உள்ளார் வடகிழக்கு பகுதியில் பழமையான பைரவர் சிலை பெரிய அளவில் உள்ளார்.
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
வடகுடி
அருகிலுள்ள இரயில் நிலையம்
கும்பகோணம்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி