வடகுடி சிவன் கோயில், திருவாரூர்
முகவரி
வடகுடி சிவன் கோயில், திருவாரூர் வட்டம், திருவாரூர் மாவட்டம் – 610101.
இறைவன்
இறைவன்: சிவன்
அறிமுகம்
தருமை முதல்வர் குருஞான சம்பந்தரின் குருவான கமலை ஞானப்பிரகாசருக்கு கி.பி. 1560இல் தஞ்சை நாயக்க மன்னர் செவ்வப்ப நாயக்கர் காலத்தில் கிருஷ்ணமாராசையன் என்பார் உத்தரவுப்படி மானியம் அளிக்கப்பட்டதை நாகை மாவட்டம் சிக்கல் நவநீதேசுவரர் கோயில் கல்வெட்டு மூலம் அறிகிறோம். இக்கல்வெட்டின்படி சிக்கல், வடகுடி, வோடாச்சேரி முதலிய சில கோயில்கட்கு கமலை ஞானப்பிரகாசர் மேற்பார்வையாளராக நியமிக்கப்பட்டார் என்பதை அறிகிறோம். இக்கல்வெட்டின் மூலம் 500 ஆண்டுகளின் முன்பே இந்த வடகுடியில் கோயில் இருந்தமைக்கான சான்று உள்ளது. மேற்கு நோக்கிய கோயில் கொண்டுள்ளார் இறைவன், இறைவி தெற்கு நோக்கிய சன்னதி கொண்டுள்ளார். பரிவார கோயில்களோ, கோஷ்டமூர்த்திகளோ இல்லை. பெரும் ஞானிகள் மேற்பார்வை பார்த்த இக்கோயில் இன்றைய நிலை??? தினசரி எளிமையான பூஜைகளுடன் நடைபெறுகிறது. #”உயர்திரு கடம்பூர் விஜய் அவர்களின் அன்புகூர்ந்த அனுமதியோடு அவர்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது”.
காலம்
500 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
வடகுடி
அருகிலுள்ள இரயில் நிலையம்
திருவாரூர்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி