லால்பேட்டை விஸ்வநாதர் சிவன்கோயில்
முகவரி
லால்பேட்டை விஸ்வநாதர் சிவன்கோயில், காட்டுமன்னார்கோயில் வட்டம்,கடலூர் மாவட்டம்
இறைவன்
இறைவன்- விஸ்வநாதர் இறைவி-விசாலாட்சி
அறிமுகம்
காட்டுமன்னார்கோயில் சிதம்பரம் சாலையில் வடக்கில் இரண்டு கிமி தொலைவில் உள்ளது லால்பேட்டை இங்கு பேருந்து நிறுத்தத்தின் அருகில் உள்ள தெருவிலேயே உள்ளது சிவன்கோயில். இக்கோயில் இறைவன்- விஸ்வநாதர் இறைவி-விசாலாட்சி, வெள்ளையர்களின் ஆட்சிகாலத்தில் ஆட்சிபுரிந்த ஆற்காடு நவாப்களில் குறிப்பிடத்தக்கவர் நவாப் ஜனாப் அன்வருத்தின் ஆவார். அவரின் அமைச்சரவையில் அமைச்சராக இருந்த ஜனாப் லால்கான் 200ஆண்டுகளின் முன் இந்த பகுதிக்கு வந்தபோது வீராணம் ஏரிக்கரை பகுதியில் இஸ்லாமிய குடியிருப்பை ஏற்ப்படுத்தினார். இவர்கள் வாழ்ந்த பகுதி லால்கான்பேட்டை என அழைக்கப்பட்டு பின்னர் லால்பேட்டை ஆனதாம். அவருடைய வருகைக்கு முன்பு சந்திரசேகரபுரம் எனப்பட்டது அன்பதை இவ்வூரில் உள்ள சந்திரசேகரர் எனும் பிரதான சிவனின் பெயரை வைத்து கூறுகின்றனர். இவ்வூரில் இரு சிவன்கோயில்கள் ஒன்று இந்த காசிவிஸ்வநாதர், இன்னொரு கோயில் சந்திரசேகரர் கோயில். இக்கோயில் முஸ்லிம் குடியிருப்பின் நடுவில் உள்ளதால் வழிபாடின்றி போய் விட்டதால் அந்த லிங்கம் இதே கோயிலின் வெளிபிரகாரத்தில் வைக்கப்பட்டுள்ளதாக கூறுகின்றனர். காசிவிஸ்வநாதர் கோயில் கிழக்கு நோக்கிய திருக்கோயில், கருவறை வாயிலில் விநாயகர், முருகன் உள்ளனர். இறைவி தென்முகம் நோக்கியுள்ளார். கருவறை கோட்டத்தில் விநாயகர், தென்முகன் லிங்கோத்பவர் உள்ளனர். வடமேற்கில் சந்திரசேகரர் எனும் லிங்க மூர்த்தி உள்ளார். பெரும்பான்மை இந்துக்கள் லால்பேட்டையில் இருந்து வெளியேறிவிட்டதால் கோயில் அதிக பக்தர்கள் வரவின்றி கோயில் மிகவும் சிதைந்து வருகிறது. சன்னதி தெருவும் முஸ்லிம்கள் குடியிருப்பாகிவிட்டதால் அங்கிருந்த அந்தணர் குடும்பங்கள் வெளியேறிவிட்டன. அதனால் அங்காளம்மன் கோயிலை பூஜை செய்யும் பெண்மணியே இந்த கோயிலையும் பூஜை செய்கிறார். இந்த காசிவிஸ்வநாதர் சலிங்கம் காசியில் இருந்து கொண்டு வரப்பட்ட ஒன்று ஆகும். இந்த சிவனாரை வணங்கினால் காசிக்கு சென்ற பலன் கிடைக்கும். # ”உயர்திரு கடம்பூர் கே.விஜயன் அவர்களின் அன்புகூர்ந்த அனுமதியோடு அவர்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது”.
காலம்
1000 – 2000
நிர்வகிக்கப்படுகிறது
–
அருகிலுள்ள பேருந்து நிலையம்
லால்பேட்டை
அருகிலுள்ள இரயில் நிலையம்
காட்டுமன்னார்கோயில்
அருகிலுள்ள விமான நிலையம்
பாண்டிச்சேரி