லட்சுமாங்குடி நீலகண்டேஸ்வரர் சிவன் கோயில், திருவாரூர்
முகவரி :
லட்சுமாங்குடி நீலகண்டேஸ்வரர் சிவன் கோயில்,
லட்சுமாங்குடி, கூத்தாநல்லூர் வட்டம்,
திருவாரூர் மாவட்டம் – 614102.
இறைவன்:
நீலகண்டேஸ்வரர்
இறைவி:
நீலோத்பலாம்பாள்
அறிமுகம்:
ராஜமன்னார்குடியின் வடகிழக்கில் 11 கிமீ தூரத்தில் வெண்ணாற்றின் கிழக்கு கரையில் உள்ளது லெட்சுமாங்குடி. லட்சுமி பூஜித்து பேறு பெற்றதால் லட்சுமிகுடி என அழைக்கப்பட்டது, தற்போது லட்சுமாங்குடி எனப்படுகிறது, இறைவன் – நீலகண்டேஸ்வரர் இறைவி – நீலோத்பலாம்பாள். கோயில் தமிழ்நாட்டில் திருவாரூர் மாவட்டம், லெட்சுமாங்குடி என்னும் ஊரில் அமைந்துள்ள சிவன் கோயிலாகும். இக்கோயிலில் இறைவன் நீலகண்டேஸ்வரர் பெரிய லிங்க மூர்த்தியாக கிழக்கு நோக்கியும்,இறைவி நீலோத்பலாம்பாள் தெற்கு நோக்கியும் உள்ளனர். இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் ஒருகாலப் பூசை நடக்கின்றது, சிறப்பு நாட்களில் பிரதோஷம் முதலியன நடக்கின்றன.
கம்பர் தெருவில் எழுந்தருளியுள்ள நீலோற்பலாம்பாள் சுவாமி சமேத நீலகண்டேஸ்வர கோயில் கும்பாபிஷேகம் 2017 நடந்தது. இறைவன் முன்னர் முகப்பு மண்டபம் தாண்டி தனி மேடையில் நந்தி உள்ளார். கருவறை கோட்டங்களில் தென்முகன் லிங்கோத்பவர் பிரம்மன் துர்க்கி உள்ளனர். விநாயகர் மற்றும், வள்ளி தெய்வானை சமேத முருகன் இருவருக்கும் தனி சிற்றாலயங்கள் உள்ளன. வடமேற்கில் பெரிய புற்று ஒன்று உள்ளது அதன் வாயிலில் நாகர்களும் சுதையாலான லட்சுமி சிலையும் உள்ளது. சண்டேசர் வழமையான இடத்தில உள்ளார். மேற்கு நோக்கி பைரவர் ஒரு மாடத்தில் உள்ளார். நவகிரகமும் அருகில் உள்ளது. கோயிலின் தென்கிழக்கில் பெரிய குளம் ஒன்றும் உள்ளது. கோயிலின் கிழக்கில் மதிலை ஒட்டியவாறு மாரியம்மன் உள்ளார்.
”உயர்திரு கடம்பூர் விஜய் அவர்களின் அன்புகூர்ந்த அனுமதியோடு அவர்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது”
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
லட்சுமாங்குடி
அருகிலுள்ள இரயில் நிலையம்
திருவாரூர்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி