மேலசேரி சிவன் கோயில், காஞ்சிபுரம்
முகவரி
மேலசேரி சிவன் கோயில், மேலசேரி, காஞ்சிபுரம் மாவட்டம் – 631 606
இறைவன்
இறைவன்: சிவன்
அறிமுகம்
செங்கல்பட்டு – வாலாஜாபாத் சாலையில் சென்று பாலூர் கிராமம் போகும் கிளை சாலையில் பாலுரை அடுத்து வருவது மேலசேரி என்ற சிறிய ஊர். சமீப காலத்தில் முட்புதர்கள் அடர்ந்து காணப்பட்ட இடத்தை சுத்தம் செய்தபோது இங்கிருந்த இறைவன் வெளிப்பட்டுள்ளார். சதுர ஆவுடையார் மேல் கிழக்கு திசை நோக்கிய உயரமான பாணம். சற்று தொலைவில் தெற்கு திசை பார்த்த அம்பாள் திருஉருவம். சிவனுக்கு முன்னாள் உடைந்த நிலையில் இருக்கும் நந்தி சிலை. இந்த இடத்தை பார்க்கும் போது கொடிமரம், கோபுரத்துடன் பெரிய அளவில் கோயில் இருந்திருக்க வேண்டும் என்று தோன்றுகிறது.. தற்போது ஏதும் இல்லை.ஆனால் கண்ட நாள் முதல் கிராம மக்கள் மிகவும் ஆர்வமாக இந்த இறைவனுக்கு பூஜை செய்து வருகின்றனர். வெகு விரைவில் கோயில் கட்டி முடிக்கவும் உறுதி பூண்டுள்ளனர்.. அவர்களின் பெருமுயற்சியாலும் இறை அருளாலும் வெகு விரைவில் ஆலயம் கட்டப்பட்டுவிடும் என்று தோன்றுகிறது. இந்த அறப்பணியில் ஈடுபட விரும்புவோர் கீழ் கண்ட அன்பர்களை தொடர்பு கொள்ளலாம். திரு பார்த்திபன் (9444865777) திரு முருகன் (9176666161) திரு நாகராஜன் (8489980602) திரு யுவராஜ் (9944190086)
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
மேலசேரி
அருகிலுள்ள இரயில் நிலையம்
வாலாஜாபாத்
அருகிலுள்ள விமான நிலையம்
சென்னை