மூங்கில்குடி கைலாசநாதர் சிவன்கோயில், திருவாரூர்
முகவரி
மூங்கில்குடி கைலாசநாதர் சிவன்கோயில், நன்னிலம் வட்டம், திருவாரூர் மாவட்டம் – 610104.
இறைவன்
இறைவன்: கைலாசநாதர் இறைவி: காமாட்சி
அறிமுகம்
திருவாரூர் – மயிலாடுதுறை சாலையில் ஒன்பதாவது கிமீ.-ல் ஓடும் வளப்பாற்றின் தென் கரையில் இடதுபுறமாக ஒரு கிமீ தூரம் சென்றால் மூங்கில்குடியை அடையலாம். இங்கு பெரியதொரு குளக்கரையில் கிழக்குநோக்கிய சிவாலயம் இருந்தது. சோழர்களின் காலத்தவை எனலாம். இறைவன் –கைலாசநாதர் இறைவி-காமாட்சி. ஆயிரமாண்டு பெருமைகள் பராமரிக்கப்படாமல் போனதால் இன்று இடி இறங்கியதுபோல் பெரும் மரமொன்று வேரோடு முற்றிலும் கோயிலை சிதைத்துள்ளது. சில நல்ல உள்ளங்கள் மூர்த்திகளை மட்டும் எடுத்து தனி தகர கொட்டகையில் வைத்து நிலைநிறுத்தி உள்ளனர். இறைவன் இறைவிக்கு துணையாக விநாயகர், முருகன் நந்தி பைரவர் ஆகியோரும் உள்ளனர். இனி எப்போது? யாரால்? என்ற இரு கேள்விகள் மட்டுமே மீதமுள்ளது! # ” உயர்திரு கடம்பூர் கே.விஜயன் அவர்களின் அன்புகூர்ந்த அனுமதியோடு அவர்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது”.
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
மூங்கில்குடி
அருகிலுள்ள இரயில் நிலையம்
திருவாரூர்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி