முப்பைத்தங்குடி மகாலிங்கசுவாமி திருக்கோயில், காரைக்கால்
முகவரி :
முப்பைத்தங்குடி மகாலிங்கசுவாமி திருக்கோயில்,
முப்பைத்தங்குடி, திருநள்ளாறு கொம்யூன்,
காரைக்கால் மாவட்டம் – 609601.
இறைவன்:
மகாலிங்கசுவாமி
அறிமுகம்:
திருநள்ளாறு – செல்லூர் வந்து அங்குள்ள பெருமாள் கோயில் வழி தெற்கில் செல்லும் சாலையில் 2 கிமீ தூரம் சென்றால் முப்பைத்தங்குடி உள்ளது. முப்பயிர்வைத்தான்குடி என அழைக்கப்பட்டு பின்னர் முப்பைத்தங்குடி ஆனதாக ஒரு தகவல். இவ்வூரில் இரு சிவாலயங்கள் உள்ளன. பெரிய கோயிலாக உள்ளது கைலாசநாதர் கோயில், சிறிதாக பிரதான சாலையில் இருப்பது மகாலிங்கசுவாமி திருக்கோயில் நான்கு சென்ட் நிலத்தில் கிழக்கு நோக்கியதாக ஒற்றை கருவறையாக கட்டப்பட்டுள்ளது இக்கோயில் கருவறை வாயிலில் விநாயகர் முருகன் சிறிய மாடங்களில் உள்ளனர். எதிரில் சிறிய அழகிய நந்தி உள்ளது. தற்போது புதிதாக தென்முகம் நோக்கியபடி அம்பிகைக்கு ஒரு கருவறை தயாராகிறது.
#”உயர்திரு கடம்பூர் விஜய் அவர்களின் அன்புகூர்ந்த அனுமதியோடு அவர்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது”.
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
முப்பைத்தங்குடி
அருகிலுள்ள இரயில் நிலையம்
திருநள்ளாறு
அருகிலுள்ள விமான நிலையம்
பாண்டிச்சேரி