முடிகொண்டான் முடிகொண்டீஸ்வர் சிவன்கோயில், நாகப்பட்டினம்
முகவரி :
முடிகொண்டான் முடிகொண்டீஸ்வர் சிவன்கோயில்,
முடிகொண்டான், கீழ்வேளுர் வட்டம்,
நாகப்பட்டினம் மாவட்டம் – 609502.
திரு.செந்தில் எண் 93849 66745
இறைவன்:
முடிகொண்டீஸ்வர்
அறிமுகம்:
கீவளூரின் வடக்கில் 4-கிமீ-ல் ஓடும் வெட்டாற்றின் தென்கரையில் உள்ள ஆனைமங்கலம்-தென்பாதி வழியாக சென்றால் முடிகொண்டான் கிராமம் செல்லலாம். திருவாரூர் மாவட்டத்தில் ஒன்றுக்கும் மேற்ப்பட்ட முடிகொண்டான் எனும் பெயர் கொண்ட கிராமங்கள் உள்ளன. இந்த முடிகொண்டான் கீவளூர் வட்டத்தில் உள்ளது. வெட்டாற்றில் இருந்து பிரிந்து வரும் ஒரு சிறிய ஓடையின் கரையில் இந்த கிராமம் உள்ளது. சோழர்களின் பழம்பெருமை வாய்த்த ஊர். அப்போது பெரிய கோயிலாக இருந்திருந்த சிவன் கோயில் காலப்போக்கில் சிதைந்து போக சமீபத்தில் சிறிய ஒற்றை கருவறை கோயிலாக கிழக்கு நோக்கி அமைத்து அதன் முன்னர் தகர கொட்டகையால் முகப்பு மண்டபம் கட்டி அதில் தெற்கு நோக்கி அம்பிகைக்கு ஒரு சன்னதி அமைக்கப்பட்டுள்ளது. இறைவன் முடிகொண்டீஸ்வர் இறைவி – பெயர் தெரியவில்லை
இறைவன் அழகிய நடுத்தர அளவுடைய லிங்க மூர்த்தியாக உள்ளார். இறைவியும் அழகிய திருமேனியராக உள்ளார். இறைவன் கருவறை வாயிலில் விநாயகர் மற்றும் பாலமுருகன் உள்ளனர். இறைவன் எதிரில் ஒரு நந்தியும் பலி பீடமும் உள்ளது. கருவறை கோஷ்டங்களே இல்லை. சண்டேசர் ஒரு மாடத்தில் வழமையான இடத்தில் உள்ளார். வடகிழக்கில் தனித்து நவகிரகங்கள் உள்ளன. அது தான் பழம் கோயிலின் நவக்கிரக பகுதியாக இருந்தது போலும். அப்படியென்றால் அரை ஏக்கர் பரப்பில் கோயில் இருந்திருக்க வேண்டும். கோயிலின் வடபுறம் வெட்ட வெளியில் ஒரு லிங்கமும், சிதைவடைந்த சூரியன் பைரவர் மற்றும் ஒரு அம்பிகை சிலையும் உள்ளன. இவை கோயிலின் பிரகார தெய்வங்களாக இருந்திருக்கலாம். இவற்றுக்கு ஒரு கொட்டகை அமைத்தல் வேண்டும், மூர்த்திகள் கூரையின்றி இருத்தலாகாது.
காலம்
1300 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
முடிகொண்டான்
அருகிலுள்ள இரயில் நிலையம்
நாகப்பட்டினம்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி