Tuesday Apr 01, 2025

முசாபர் சுகஸ்தல் திருத்தலம்

முகவரி :

சுகஸ்தல் திருத்தலம்

முசாபர் நகர் மாவட்டம்,

உத்தரப்பிரதேசம் – 251316.

இறைவன்:

கிருஷ்ணர்

அறிமுகம்:

உத்தரப்பிரதேச மாநிலம், முசாபர் நகர் மாவட்டத்தில் கங்கா தேவியின் மடியில் அமைந்துள்ளது, தவ பூமியாகக் கருதப்படும் சுகஸ்தல் திருத்தலம். ஆண்டு முழுவதும் பாகவத சப்தாஹம் நடைபெறும் முதல் பாகவத பீடமான இத்தலத்தில் இதுவரை லட்சக் கணக்கான சப்தாஹங்கள் நடந்துள்ளன.

பாகவத சப்தாஹம் என்றவுடன் நமக்கு உடனே நினைவுக்கு வருவது நைமிசாரண்யம்தான். அந்தப் புனிதத் தலம் சூத மகாமுனிவர், ஆயிரக்கணக்கான முனிவர்களுக்கு ஸ்ரீசுகர் கூறிய பாகவதத்தை எடுத்துக் கூறிய தலம். ஆனால், சுகஸ்தல், சுகர்த்தல், சுக்தால் என்றெல்லாம் அழைக்கப்படும் இந்தப் புண்ணியத் தலம், ஸ்ரீசுகப் பிரம்மம் ஏழு நாட்கள் பரீட்சித் மகாராஜாவுக்கு பாகவதக் கதையைக் கூறிய புகழ் பெற்ற திருத்தலம். இது, ‘சுக மாகாத்மியம்’ என்ற நூலின் மூலம் அறிய வருகிறது. 

புராண முக்கியத்துவம் :

இவ்விடம் வரலாற்றுப்படி மட்டுமின்றி, ஆன்மிக வழியிலும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த புண்ணியத் தலமாகக் கருதப்படுகிறது.
தமது தந்தை வியாச பகவானால் இயற்றப்பட்ட பாகவதக் கதையை, ஸ்ரீசுக பிரம்மம் கங்கை தீரத்தில் அமைந்த ஒரு வட விருட்சத்தின் கீழ் அமர்ந்து மகா முனிவர்கள் சூழ, பரீட்சித் மன்னனுக்கு ஏழு நாட்களில் உபதேசித்தார். அதனாலேயே இவ்விடத்துக்கு சுகஸ்தல் அல்லது சுக்தால் என்ற பெயர் ஏற்பட்டது.

சிறப்பு அம்சங்கள்:

சுமார் 5,000 ஆண்டுகளுக்கு முன் இக்கலியுகத்தில் ஸ்ரீ சுகபிரம்ம மகரிஷி, இன்றும் இத்தலத்தில் காட்சி தரும் ஆலமரத்தின் அடியில் அமர்ந்து பாகவதம் கூறியுள்ளார். இம்மரத்தின் அடியில் ஸ்ரீசுகர் அமர்ந்து பாகவதக் கதையை பரீட்சித்துக்கு கூறிய போது அவரைச் சுற்றி சுமார் 80,000 முனிவர்கள் அமர்ந்திருந்தனராம். தற்போது இம்மரம் 150 அடி உயரம் வளர்ந்து, தன்னருகில் வருபவர்களுக்கு நிழலும் நிம்மதியும் வழங்கி வருகிறது. இப்புராதன மரத்துக்கு விழுதுகள் வளருவதில்லை என்பது சிறப்பு. இந்த ஆலமரத்தின் விழுதுகள் பூமியில் ஊன்றாத நிலையில், கல்யாண் தேவ்ஜியின் சேவா அறக்கட்டளை, அறிஞர்கள் உதவியுடன் இந்த மரம் கீழே சரியாமல் பார்த்துக் கொண்டது.

காலம்

5000 ஆண்டுகள் பழமையானது

அருகிலுள்ள பேருந்து நிலையம்

சுகஸ்தல்

அருகிலுள்ள இரயில் நிலையம்

முசாபர்நகர்

அருகிலுள்ள விமான நிலையம்

டேராடூன்

Location on Map

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top