Saturday Jan 11, 2025

மாறநேரி பசுபதீஸ்வரர் சிவன்கோயில், தஞ்சாவூர்

முகவரி :

மாறநேரி பசுபதீஸ்வரர் சிவன்கோயில்,

மாறநேரி, பூதலூர் வட்டம்,

தஞ்சாவூர் மாவட்டம் – 613102.

சுரேஷ் (9486060608 )

இறைவன்:

பசுபதீஸ்வரர்

இறைவி:

சிவகாமசுந்தரி

அறிமுகம்:

வெண்ணாற்றை ஒட்டியபடி கிழக்கு நோக்கி உள்ளது கோயில். நாற்புறமும் சீரற்ற கருங்கல் கொண்டு கட்டப்பட்ட உயர்ந்த மதில் சுவர்கள், முகப்பில் ராஜகோபுரமில்லை, அழகிய சுதைகள் கொண்ட நுழைவாயில் மட்டும் உள்ளது. இக்கோயில் 2009-ம் ஆண்டு பிப்ரவரி 6-அன்று பாலாலயம் செய்யப்பட்டு பல ஆண்டு காலமாக பணிகள் நடைபெற்று வருகின்றது. வரும் ஜூன் மாதம் 25 (ஆனி 10) அன்று குடமுழுக்கு செய்ய ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இக்கோயில் பல்லவர்கள் காலத்தில் கட்டப்பட்ட அரியவகை கோயில்களில் ஒன்றாக கருதப்படுகிறது.

இறைவன் – பசுபதீஸ்வரர் இறைவி- சிவகாமசுந்தரி. நந்தி நேர்முகமாக சிவனை பார்க்காமல், தன்னுடைய தலையை லேசாக திருப்பி அம்மனை பார்க்கும் வகையில் அமைந்துள்ளது இக்கோவிலில் உள்ள பசுபதீஸ்வரரை வணங்கி அர்ச்சனை செய்து வழிபட வளம் பெருகி திருமணத்தடை நீங்கும் என்று கூறப்படுகிறது. கோவில் வளாகத்தில் 2 துர்க்கை சிலைகள் உள்ளன. இதில் ஒன்று பல்லவர் காலத்து சிலை. மற்றொரு சிலை சோழர் காலத்துக்குரியது.

இக்கோவில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. இக்கோவிலில் திருப்பணிகள் நடைபெறுவதால் கோவிலின் மூலவர் உள்ளிட்ட அனைத்து விக்கிரகங்களும் கோவிலின் அருகில் கொட்டகையில் வைக்கப்பட்டு தினமும் பூஜைகள் நடந்து வருகிறது. கோவிலின் மூலவர் மீது சூரிய ஒளி படும் நிகழ்வு முன்னர் நிகழ்ந்துள்ளது சரியான நாள் தெரியவில்லை பிரகார சிற்றாலயங்கள் விநாயகர் முருகன் சண்டேசர் ஆகியோருக்கும் அழகிய கிழக்கு நோக்கிய தனி கோயில் ஒன்றும் இதே வளாகத்தில் ராமருக்கும் உருவாகிறது.

புராண முக்கியத்துவம் :

இந்த ஊருக்கு நேரிவாயில், தென்நந்திபுரம், தீனசிந்தாமணி சதுர்வேதிமங்கலம் என பல பெயர்களில் அழைக்கப்பட்டாலும் மாறநேரி எனும் பெயரே நிலைபெற்றுள்ளது. சேரன் செங்குட்டுவன், சோழர்கள், பல்லவர்கள் என பல மன்னர்களுக்கு இவ்வூர் தொடர்புடையதாக விளைங்குகிறது. பதிற்றுபத்து, சிலப்பதிகாரம் போன்ற நூல்களில் நேரிவாயில் என்ற பெயர் குறிக்கப்பட்டுள்ளது. கவரன் மாறன் எனும் பெரும்பிடுகு முத்தரையன் பெயரால் மாறன்நேரி என அழைக்கப்பட்டது. மூன்றாம் நந்திவர்மனின் மகனான நிருபதுங்க பல்லவனின் 24 வது ஆட்சி ஆண்டில் கிபி 893ல் தென்நந்திபுரம் எனும் ஊரில் உள்ள நிருபகேசரி ஈஸ்வரம் எனும் கோயிலுக்கு பெண்ணொருவர் 30 கழஞ்சு பொன் முதலீடு செய்து, அதன் வட்டியில் இருந்து நந்தா விளக்கு எரிக்க வேண்டும் எனவும், அந்த தர்மத்தை தொடர்ந்து காப்பவரின் திருவடியை தன் தலைமேல் சூடுவதாகவும் அக்கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் மாறநேரியின் பழம் பெயர் தென்நந்திபுரம் எனவும் கோயிலின் பெயர் நிருபகேசரி ஈஸ்வரம் என அறியலாம்.

இங்குள்ள கல்வெட்டுக்களில் ஒற்றை எழுத்துக்களில் புள்ளி அமையாமல் ஒரு கொக்கி போன்ற குறியீடு அமைந்துள்ளது சிறப்பு. இந்த கல்வெட்டு கருவறை நுழைவாயில் நிலைக்காலில் தலை கீழாக உள்ளது. என குடவாயில் ஐயா கூறியுள்ளார். மெய் எழுத்துகளில் புள்ளி வைக்கப்பட்ட மெய் எழுத்துக்கள் இங்கு காணப்படுகின்றன. வீரமாமுனிவர் எனும் Joseph Beschi தான் தமிழ் எழுத்துக்களுக்கு புள்ளி வைக்கும் முறையை கொண்டுவந்ததாக கூறுவர் ஆனால் இங்குள்ள கல்வெட்டுக்கள் மூலம் முற்கால சோழர் கல்வெட்டுக்களில் புள்ளி உள்ளதை காணலாம், பல்லவர் காலத்திலேயே மெய் எழுத்துக்கள் புள்ளி அமையாமல் ஒரு கொக்கி போன்ற வடிவம் கொடுக்கப்பட்டு இருப்பதை இங்கு காணலாம்.

காலம்

1000 ஆண்டுகள் பழமையானது

அருகிலுள்ள பேருந்து நிலையம்

மாறநேரி

அருகிலுள்ள இரயில் நிலையம்

தஞ்சாவூர்

அருகிலுள்ள விமான நிலையம்

திருச்சி

Location on Map

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top