மல்லியம் தென் காளத்தீஸ்வரர் சிவன் கோயில், மயிலாடுதுறை
முகவரி
மல்லியம் தென் காளத்தீஸ்வரர் சிவன் கோயில், மல்லியம், மயிலாடுதுறை மாவட்டம் – 609806.
இறைவன்
இறைவன்: தென் காளத்தீஸ்வரர்
அறிமுகம்
மயிலாடுதுறையிலிருந்து சுமார் 10 கிலோ மீட்டர் தொலைவில் கும்பகோணம் செல்லும் சாலையில் அமைந்துள்ள சிற்றூர். திருமாலால் ஆடப்பட்ட வைணவக் கூத்து, வாணன் என்னும் அரக்கன் தேவர்களுக்குத் துன்பம் செய்தபொழுது, திருமால் மல்லர்களின் துணையோடு வாணனை வதம் செய்த பொழுது ஆடிய ஆடலாகும். மற்போர் புரிதல் என்ற செயலின் அடிப்படையில் மல்லியகூத்து என பெயர் பெற்றது. இந்த ஆடல்கூத்து செய்வோர் குடியிருந்த பகுதியாகும் இந்த மல்லியம். மராட்டியர் கால அன்னசத்திரம் இருந்த ஊர் ஆகும். இதெல்லாம் பழம்பெருமையாக மட்டுமே தன்னகத்தே வைத்து சாலையோர ஊராக உள்ளது மல்லியம். இவ்வூரின் வடக்கில் ஓடும் காவிரியின் வடகரையில் உள்ளது இந்த சிறிய ஒற்றை கருவறை சிவன்கோயில் ஒற்றை லிங்கமாக இருந்ததை கரையோரத்தில் பிரதிஷ்ட்டை செய்து தென் காளத்தீஸ்வரர் என பெயரும் வைத்து மக்கள் வழிபாடு செய்கின்றனர். பெரிய தகர கொட்டகை ஒன்றும் போட்டுள்ளனர். கிழக்கு நோக்கிய பெரிய லிங்கமூர்த்தியாக உள்ளார் இறைவன். எங்கிருந்து இங்கே வந்தது? பரிவாரங்களுடன் இருந்த பெரியகோயில் காவிரி வெள்ளத்தில் சிதைந்து போனதா? ஆதியில் இருந்து தனித்தே இருந்த மூர்த்தியா? காலதேவனன்றி யார் அறிவார். # ” உயர்திரு கடம்பூர் கே.விஜயன் அவர்களின் அன்புகூர்ந்த அனுமதியோடு அவர்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது”.
காலம்
500 – 1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
மல்லியம்
அருகிலுள்ள இரயில் நிலையம்
மயிலாடுதுறை
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி