மயிலாடுதுறை தெப்பகுளம் காசிவிஸ்வநாதர் சிவன்கோயில்

முகவரி :
மயிலாடுதுறை தெப்பகுளம் காசிவிஸ்வநாதர் சிவன்கோயில்,
மயிலாடுதுறை நகரம்
மயிலாடுதுறை – 609001.
இறைவன்:
காசிவிஸ்வநாதர்
இறைவி:
காசி விசாலாட்சி
அறிமுகம்:
மயிலாடுதுறை நகரை வாழ்வித்து செல்லும் காவிரியில் துலாகட்டம் எனும் படித்துறை உள்ளது. மகாதான தெருவின் வடபுறத்தில் உள்ள துலாகட்டம் காசி விஸ்வநாதர் கோயிலுக்கு சற்று எதிரில் உள்ளது இந்த தெப்பகுளம் காசிவிஸ்வநாதர் கோயில். அகத்திய முனிவர் தென்னகம் வந்தபோது காவிரியில் நீராடி இத்தல இறைவனை வழிபட்டதாக ஐதீகம் மேற்கு நோக்கிய திருக்கோயில், முகப்பில் மூன்று நிலை ராஜகோபுரம் உள்ளது. அதனை தாண்டியவுடன் மேற்கு நோக்கிய இறைவன் அழகிய லிங்கமூர்த்தியாக காட்சி தருகிறார், அம்பிகை தெற்கு நோக்கி கருவறை கொண்டுள்ளார் இரு கருவறைகளையும் முகப்பு மண்டபம் இணைக்கிறது அதில் நந்தி பலிபீடம் உள்ளது.
அழகிய உயர்ந்த கொடிமரம் பித்தளை கவசமிடப்பட்டு விண்ணில் இருந்துவரும் மின்னூட்டம்பெற்ற பிரபஞ்ச கதிர்களை ஈர்த்து கோயிலுள் சக்தி அலைகள் பரவச்செய்கின்றது. இறைவன் – காசி விஸ்வநாதர் இறைவி – காசி விசாலாட்சி. இறைவன் கருவறை வாயிலில் இடதுபுறம் முருகனும் வலதுபுறம் விநாயகரும் மாறி இருப்பது ஏன் என தெரியவில்லை. அம்பிகை கருவறையை ஒட்டி தெற்கு நோக்கிய காவேரி அம்மன் நின்ற கோலத்தில் அருள் பாலிக்கிறார். கருவறை கோட்டங்களில் மூர்த்திகள் ஏதுமில்லை. தென்மேற்கில் மதில் சுவற்றை ஒட்டி விநாயகர் மற்றும் வடமேற்கு மதிலை ஒட்டி வள்ளி தெய்வானை சமேத முருகனும் உள்ளனர். வடகிழக்கில் பைரவர் உள்ளார் அருகில் ஒரு பெரிய வேம்பு தழைத்து நிற்கிறது. வடக்கில் சண்டேசரும் சிறிய மண்டபத்தில் உள்ளார். தருமபுரம் மடத்திற்கு சொந்தமானது இக்கோயில். பல ஆண்டுகளாக ஆக்கிரமிப்பிலும் சிதைவிலும் இருந்த இக்கோயில் சமீபத்தில் முற்றிலும் சீரமைக்கப்பட்டு அழகுடன் காட்சி தருகிறது.









காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
மயிலாடுதுறை
அருகிலுள்ள இரயில் நிலையம்
மயிலாடுதுறை
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி