மதகரம் மகர லிங்கேஸ்வரர் சிவன்கோயில், திருவாரூர்
முகவரி :
மதகரம் மகர லிங்கேஸ்வரர் சிவன்கோயில்,
மதகரம் வலங்கைமான் வட்டம்,
திருவாரூர் மாவட்டம் – 614207.
இறைவன்:
மகர லிங்கேஸ்வரர்
அறிமுகம்:
மதகயம் என்பது ஆண்யானையை குறிக்கும், இதுவே மதகரம் என மருவி இருக்கலாம். இந்த ஆண்யானை வழிபட்டதால் இறைவன் பெயர் மதகர லிங்கேஸ்வரர் என பெயர் இருந்திருக்கவேண்டும்,. இவ்வூரில் இரு சிவன் கோயில்கள் உள்ளன. முதலில் ஊரின் முகப்பில் ஒரு கோயில் உள்ளது, திருப்பணிகள் செய்யப்பட்டு அழகுடன் உள்ளது இக்கோயிலில் இறைவன் இறைவியின் பெயர் எழுதப்படவில்லை எனினும் இதுவே பெயராக இருந்திருக்க வேண்டும். சிறிய கோயில் தான், இறைவன் கிழக்கு நோக்கியும், இறைவி தெற்கு நோக்கியும் உள்ளார்கள். இரண்டாவது கோயில் ஊரின் கிழக்கு பகுதியில் உள்ளது. ஒரு பெரிய வேம்பின் கீழ் ஒரு கிழக்கு பார்த்த வலம்புரி விநாயகர் கோயில் உள்ளது. அதற்க்கு முன்னர் ஒரு பெரிய லிங்கமூர்த்தி ஒரு தட்டையான தகர கொட்டகையில் உள்ளார். இவருக்கு மகர லிங்கேஸ்வரர் என பெயர் உள்ளது. இந்த இரு கோயில் லிங்கங்களும் விநாயகரும் ஓரிடத்தில் இருந்திருக்க வேண்டும். யானைகள் வணங்கிய இறைவனை விளக்கிட்டு வழிபடுவதன் மூலம் மகாலட்சுமியின் அருள் கிடைக்கும் .
#”உயர்திரு கடம்பூர் விஜய் அவர்களின் அன்புகூர்ந்த அனுமதியோடு அவர்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது”.
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
மதகரம்
அருகிலுள்ள இரயில் நிலையம்
திருவாரூர்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி