மண்ணியாறுதலைப்பு காசிவிஸ்வநாதர் சிவன்கோயில், தஞ்சாவூர்
முகவரி :
மண்ணியாறு தலைப்பு காசிவிஸ்வநாதர் சிவன்கோயில்,
மண்ணியாறு தலைப்பு, பாபநாசம் வட்டம்,
தஞ்சாவூர் மாவட்டம் – 614203.
இறைவன்:
காசிவிஸ்வநாதர்
இறைவி:
காசி விசாலாட்சி
அறிமுகம்:
கும்பகோணம்- திருவையாறு சாலையில் உள்ளது இந்த மண்ணியாறு தலைப்பு, காவிரியில் இருந்து வடக்கில் சிறிய கிளை வாய்க்காலாக பிரிகிறது இந்த மண்ணியாறு. இந்த பிரிவில் உள்ள சாலையை ஒட்டி உள்ளது பெரிய அரசமரம் ஒன்றின் கீழ் ஆலயம் அமைந்துள்ளது. சிறிய சிவன் கோயில். கரையினை ஒட்டிய கோயில் என்பதால் சற்று பள்ளத்தில் கீழிறங்கி கோயிலுக்கு செல்ல வேண்டும்,
இறைவன்- காசிவிஸ்வநாதர் இறைவி காசி விசாலாட்சி
கிழக்கு நோக்கிய கோயில் இறைவன் கிழக்கும் இறைவி தெற்கும் நோக்கி உள்ளனர். கருவறை வாயிலின் இருபுறத்திலும் விநாயகர் மற்றும் முருகன் உள்ளனர். நந்தி எதிரில் உள்ளார். கருவறை கோட்டங்கள் எதுவுமில்லை. நவகிரகங்கள் உள்ளன. அடியார் ஒருவர் பூஜை செய்து கொண்டு உள்ளார். விளம்பர பலகை வைத்து பல தகவல்கள் எழுதப்பட்டு உள்ளன. எனினும் அதன் உண்மை தன்மை கேள்விக்குறி தான்…. இருந்தால் என்ன?
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
மண்ணியாறு தலைப்பு
அருகிலுள்ள இரயில் நிலையம்
பாபநாசம்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி