மணலூர் பின்னவநாதர் (விஸ்வநாதர்) சிவன்கோயில், நாகப்பட்டினம்
முகவரி :
64.மணலூர் சிவன்கோயில்,
64.மணலூர், கீழ்வேளுர் வட்டம்,
நாகை மாவட்டம் – 610106.
இறைவன்:
பின்னவநாதர் / விஸ்வநாதர்
அறிமுகம்:
திருவாரூரில் இருந்து புதுப்பத்தூர் செல்லும் சாலையில் 6 கிமீ தூரத்தில் உள்ள காரியாங்குடியில் இருந்து கிழக்கில் செல்லும் சாலையில் மூன்று கிமீ தூரம் சென்றால் மணலூர் உள்ளது. பல மணலூர்கள் இதே மாவட்டத்தில் உள்ளதால் இது 64.மணலூர் எனப்படுகிறது. சிறிய விவசாய கிராமம், இங்கு நூறாண்டு பழமையான கலைமகள் என ஒரு பள்ளி உள்ளது. இதே தெருவில்தான் மூன்றாம் பிறை போன்ற ஒரு குளத்தின் கரையில் கிழக்கு நோக்கிய சிவாலயமாக உள்ளது.
இறைவன் – பின்னவநாதர் என்றும் விஸ்வநாதர் என [HR&CE]ல் உள்ளது. கோயிலின் முகப்பு இரும்பு கதவை திறக்கும் போது கிரீச்சிடும் சப்தமே கோயிலின் நிலையை சொல்கிறது. முற்றிலும் செங்கல் கொண்டு கட்டப்பட்டுள்ளது. இறைவன் கிழக்கு நோக்கிய கருவறை கொண்டுள்ளார். இறைவி தெற்கு நோக்கி உள்ளார். இரு கருவறைகளையும் ஒரு மண்டபம் இணைக்கிறது. அந்த மண்டபத்தின் வெளியில் ஒரு சிறிய மண்டபத்தில் நந்தி இறைவனை நோக்கியவாறு உள்ளார்.
வடகிழக்கு மூலையில் நவக்கிரக மண்டபம், எண்ணை சார்த்தப்படாத, வஸ்திரம் இல்லாத திருமேனிகள், சுற்றிலும் வேப்பமர சருகுகள் விழுந்து கிடக்கின்றன, அத்தி செடிகள் ஆங்காங்கே முளைத்து வேரோடிக்கிடக்கிறது. தென்முகன் எண்ணைக்காப்பு, வஸ்திரமும், இன்றி சில பூக்களை மட்டும் சூடிக்கொண்டு அமர்ந்திருக்கின்றார். அர்ச்சகர் ஐந்தாறு ஊர் கோயில்களுக்கு மேல் பூஜை செய்கிறார். அத்தனை கோயில்களிலும் வர போக கூட ஆளில்லை. ஐநூறுக்கும் அதிகமான மக்கள் வசிக்கும் ஊரில் வீட்டுக்கு ஒருவர கூட வரவா இயலவில்லை?
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
மணலூர்
அருகிலுள்ள இரயில் நிலையம்
திருவாரூர்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி