மடையம்பாக்கம் வைத்தீஸ்வரன் சிவன்கோயில், காஞ்சிபுரம்
முகவரி
மடையம்பாக்கம் வைத்தீஸ்வரன் சிவன்கோயில், மடையம்பாக்கம், செய்யூர் தாலுகா, காஞ்சிபுரம் மாவட்டம் – 603 305
இறைவன்
இறைவன்: வைத்தீஸ்வரன்
அறிமுகம்
காஞ்சிபுரம் வட்டத்தில் செய்யூர் தாலுக்காவிலுள்ள மடையம்பாக்கம் கிராமத்தில் இக்கோவில் காணப்படுகிறது. இது மதுராந்தகத்திலிருந்து 30கி.மீ. தூரத்திலும், செய்யூரிலிருந்து 8கி.மீ. தூரத்திலும், ECR சீக்கனாங்குப்பத்திலிருந்து 4கி.மீ. தூரத்திலும் உள்ளது. இக்கோவில் கிராமக்கோவிலாகும். கோயில் முற்றிலும் சிதிலமாகியுள்ளது. ஆதலால் ஸ்வாமியை தனியாக எடுத்து சிறிய மண்டபம் கட்டி வைத்துள்ளனர். ஆனால் அதுவும் சிதிலமடைய ஆரம்பித்துள்ளது. இச்சிவலிங்கம் பல்லவர் காலத்தில் இங்கு கட்டிய 108 சிவாலயத்தில் ஒன்றாகும். தட்சிணாமூர்த்தி, பிள்ளையார், பைரவர், சூரியன், நந்தியம்பெருமாள் மற்றும் முருகன் ஆகியோர் உள்ளனர். மண்டபத்தின் வெளியெ நந்தி காணப்படுகிறது. இக்கோவிலின் அருகே குளம் ஒன்று உள்ளது. பிரதோஷம் மட்டும் இங்கு கொண்டாடப்படுகிறது.
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
மடையம்பாக்கம்
அருகிலுள்ள இரயில் நிலையம்
மதுராந்தகம்
அருகிலுள்ள விமான நிலையம்
சென்னை