பொய்கைநல்லூர் காசி விஸ்வநாதர் சிவன்கோயில், திருவாரூர்
![](https://lightup-temples.s3.ap-south-1.amazonaws.com/wp-content/uploads/350307906_734441361772457_3520627609223639875_n.jpg)
முகவரி :
பொய்கைநல்லூர் காசி விஸ்வநாதர் சிவன்கோயில்,
பொய்கைநல்லூர், கூத்தாநல்லூர் வட்டம்,
திருவாரூர் மாவட்டம் – 610206.
இறைவன்:
காசி விஸ்வநாதர்
இறைவி:
காசி விசாலாட்சி
அறிமுகம்:
திருவாரூர் – திருத்துறைப்பூண்டி சாலையில் → மாவூர் வந்து, வடபாதிமங்கலம் சாலையில் 5 கிமீ-ல் உள்ள ஊட்டியாணியில் தெற்கில் திரும்பி புள்ளமங்கலம் → மணக்கரை → சேந்தங்குடி அடையலாம். இந்த சேந்தங்குடியின் உட்கிராமம் தான் பொய்கைநல்லூர், புத்தகரம். வெண்ணாற்றின் மேற்கு பகுதியில்தான் இந்த மூன்று ஊர்களும் அமைந்துள்ளது. இந்த மூணு ஊர்களிலும் சிவன் கோயில்கள் உள்ளது. சேந்தங்குடியின் கிழக்கு பகுதி பொய்கைநல்லூர். இங்கு கிழக்கு நோக்கிய சிவன்கோயில் சாலை ஓரத்திலேயே அமைந்துள்ளது.
இறைவன் – காசி விஸ்வநாதர் இறைவி காசி விசாலாட்சி இறைவன் சிறிய மூர்த்தியாக கிழக்கு நோக்கிய கருவறை கொண்டுள்ளார், இறைவி தெற்கு நோக்கிய கருவறை கொண்டுள்ளார். இரு கருவறைகளையும் ஒரு பெரிய கான்கிரீட் மண்டபம் இணைக்கிறது. அதன் வெளியில் சிறிய நந்தி இறைவனை நோக்கி உள்ளது. வெளியில் சிறிய விநாயகரும் உள்ளார். கருவறை கோட்டங்களில் தென்முகன், வடக்கில் துர்க்கை உள்ளனர். பிரம்மன் சிமெண்ட்டால் ஆன சுதையாக உள்ளார். பிரகாரத்தில் விநாயகர் முருகன் மகாலட்சுமி ஆகியோருக்கு சிற்றாலயங்கள் உள்ளன, சண்டேசர் வழமையான இடத்தில் உள்ளார். வடகிழக்கில் நவகிரகம், மற்றும் தெற்கு நோக்கிய காலபைரவர் உள்ளார். வளாகம் முழுதும் வாழை தென்னை மற்றும் பூச்செடிகள் வைக்கப்பட்டு உள்ளன. கோயில் ஒரு கால பூஜையில் உள்ளது என நினைக்கிறேன், பல சிறப்புக்கள் இருந்தாலும் கோயில் நிலை குடத்திலிட்ட விளக்காகவே உள்ளது.
![](https://3.108.66.198/wp-content/uploads/2023/06/350070483_561631752824358_5437485297287051651_n-1024x771.jpg)
![](https://3.108.66.198/wp-content/uploads/2023/06/350118968_3459203790989062_7515727362734398922_n-771x1024.jpg)
![](https://3.108.66.198/wp-content/uploads/2023/06/350122637_203804695862256_1771839383444907929_n-1024x771.jpg)
![](https://3.108.66.198/wp-content/uploads/2023/06/350292097_1155819182477535_879121565625898227_n-1024x771.jpg)
![](https://3.108.66.198/wp-content/uploads/2023/06/350305796_704041438192030_782808560823596256_n-771x1024.jpg)
![](https://3.108.66.198/wp-content/uploads/2023/06/350307906_734441361772457_3520627609223639875_n-1024x771.jpg)
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
பொய்கைநல்லூர்
அருகிலுள்ள இரயில் நிலையம்
திருவாரூர்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி