பெனத்தாரான் சிவன் கோவில், இந்தோனேசியா
முகவரி
பெனத்தாரான் சிவன் கோவில், பெனத்தாரான், ங்லேகோக், பிளிட்டர், கிழக்கு ஜாவா 66181, இந்தோனேசியா
இறைவன்
இறைவன்: சிவன்
அறிமுகம்
பெனத்தாரான் என்பது இந்தோனேசியாவில் கிழக்கு ஜாவா மாகாணத்தில் பிலித்தார் நகரில் இருந்து வடக்கே 10 கிமீ தொலைவில் அமைந்துள்ள கோவில் ஆகும். இக்கோவில் கிபி 12-ஆம் நூற்றாண்டு முதல் 15-ஆம் நூற்றாண்டு வரையான காலப்பகுதியில் கட்டப்பட்டிருக்கலாம் என நம்ப்பப்படுகிறது. இது மயாபாகித்து பேரரசு காலத்தில் குறிப்பாக ஹயாம் வுரூக் பேரரசரின் ஆட்சியில் அவரது முக்கிய வழிபாட்டிடமாக முக்கியத்துவம் பெற்று விளங்கியது. பெனத்தாரான் கோவில் கேதிரி காலத்தில் இருந்து பெயர் பெற்று விளங்கியுள்ளது. கிருஷ்ணயானா (பாகவத புராணம்) காவியக் கவிதை இதனை சித்தரிக்கிறது. இக்கோவில் “பலா” கோயில் என “நகரகிரேத்தகாமா” என்ற பண்டைய கிழக்கு சாவக புகழஞ்சலிக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது. அயாம் புரூக் பேரரசர் தனது கிழக்கு சாவக அரச சுற்றுப் பயணத்தின் போது இக்கோவிலுக்கு வருகை தந்திருந்தார். இக்கோவிலும் அதன் சுற்றுப்புறமும் உலகப் பாரம்பரியக் களங்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.
புராண முக்கியத்துவம்
இந்த கோயில் 12 ஆம் நூற்றாண்டு முதல் 15 ஆம் நூற்றாண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் கட்டப்பட்டது, இந்த கோவில் மயாபாகித்து இராஜ்ஜியத்தில் குறிப்பாக அரசர் ஹயம் வுரூக்கின் கீழ் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டிருந்தது. விஷ்ணுவின் வாழ்க்கை கதைகளை வெவ்வேறு அவதாரங்களில் காட்டும் மிகப்பெரிய இந்தோனேசிய நிவாரணத் தொகுப்பில் ஒன்றை உள்ளடக்கியிருப்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக, கோயில் தளத்தில் இராமாயண காவியத்தின் ஜாவானிய பதிப்பில் இராம கதையும், திரிகுணாவின் கிருஷ்ணாயண காவியக் கவிதை சித்தரிக்கப்பட்ட கிருஷ்ண கதையும் அடங்கும்.
காலம்
12 ஆம் நூற்றாண்டு
நிர்வகிக்கப்படுகிறது
யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளம்
அருகிலுள்ள பேருந்து நிலையம்
பெனத்தாரான்
அருகிலுள்ள இரயில் நிலையம்
மலாங் நிலையம்
அருகிலுள்ள விமான நிலையம்
மலாங்