பெட்டாடபுரா வீரபத்ரா கோயில், கர்நாடகா
முகவரி
பெட்டாடபுரா வீரபத்ரா கோயில், பெட்டாடதுங்கா, கர்நாடகா 571102
இறைவன்
இறைவன்: வீரபத்ரா
அறிமுகம்
பெட்டாடபுரா என்பது இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தின் மைசூர் மாவட்டத்தில் பிரியபாட்னா தாலுகாவில் உள்ள கிராமமாகும். இது மாவட்ட தலைமையக மைசூரிலிருந்து மேற்கு நோக்கி 72 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. சித்திலு மல்லிகார்ஜுனசாமி கோயிலுக்கு அருகில் பெட்டாடபுரா வீரபத்ரா கோயில் அமைந்துள்ளது. நந்தி தேவரால் பாதுகாக்கப்பட்ட சிவலிங்கத்தைக் கொண்ட பண்டைய வீரபத்ர கோயிலின் நிலமை மிகவும் மோசமான நிலையில் உள்ளது. கோயில் உள்ளே மிகவும் இருட்டாக உள்ளது மற்றும் இக்கோவிலை யாரும் பராமரிக்கப்படவில்லை. இந்த இடம் முற்றிலும் புறக்கணிக்கப்பட்ட நிலையில் உள்ளது. மேலும் மலையேருவர்கள் இந்த இடத்தை ஓய்வு எடுக்க பயன்படுத்திகின்றனர்.
காலம்
1000 – 2000 ஆண்டுகள் பழமையானது
நிர்வகிக்கப்படுகிறது
இந்திய தொல்பொருள் ஆய்வு மையம் (ASI)
அருகிலுள்ள பேருந்து நிலையம்
பெட்டடபுரா
அருகிலுள்ள இரயில் நிலையம்
ஹோசாகரஹரா
அருகிலுள்ள விமான நிலையம்
ஹாசன்