பெட்கான் லஷ்மிநாரயணன் கோவில், மகாராஷ்டிரா
முகவரி
பெட்கான் லஷ்மிநாரயணன் கோவில், பெட்கான் – அஜனுஜ் சாலை, பெட்கான், மகாராஷ்டிரா – 413701
இறைவன்
இறைவன்: லஷ்மிநாரயணன்
அறிமுகம்
பதுர்காட் இடிபாடுகள் புனேவிலிருந்து 100 கிமீ கிழக்கே அமைந்துள்ளது. இந்த கோவில் பெட்கான் கிராமத்தில், மகாராஷ்டிராவில் அமைந்துள்ளது. இந்த கோவில், லட்சுமிநாராயணனாக விஷ்ணுவுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. முகலாயர்களின் கீழ் கி.பி 1680-ல் பெட்கான் முக்கியமான கோட்டையாக இருந்தது. கி.பி 11-12 ஆம் நூற்றாண்டை சேர்ந்த நான்கு கோவில்களின் எச்சங்கள் கோட்டைக்குள் உள்ளன. லட்சுமிநாராயணரின் கோவில்கள் பீமா நதியின் இடது கரையில் அமைந்துள்ளன. லக்ஷ்மிநாராயணன் கோவில் மிகச்சிறந்த செதுக்கல்களை கொண்ட கோவில். திட்டத்தில் கர்ப்பகிரகம், அந்தராளம் மற்றும் மகாமண்டபம் மற்றும் முகமண்டபத்தைக் கொண்டுள்ளது. மகாமண்டபத்திற்கு மேற்கு, வடக்கு மற்றும் தெற்கு திசைகளில் நுழைவாயில்கள் உள்ளன. கோவிலின் வெளிப்புற மேற்பரப்பு சிவன், விஷ்ணு மற்றும் அஷ்டதிக்பாலகர்களின் பல்வேறு வடிவங்களின் சிற்பங்களால் செதுக்கப்பட்டுள்ளது.
காலம்
11 ஆம் நூற்றாண்டு
நிர்வகிக்கப்படுகிறது
இந்திய தொல்பொருள் ஆய்வு மையம் (ASI)
அருகிலுள்ள பேருந்து நிலையம்
பெட்கான்
அருகிலுள்ள இரயில் நிலையம்
அகமத்நகர்
அருகிலுள்ள விமான நிலையம்
அவுரங்காபாத் / புனே