புவனேஸ்வர் தீர்த்தேஸ்வரர் கோயில், ஒடிசா
முகவரி
புவனேஸ்வர் தீர்த்தேஸ்வரர் கோயில், பிந்துசாகர் சாலை, கெளரி நகர், பழைய டவுன், புவனேஸ்வர், ஒடிசா 751002, இந்தியா
இறைவன்
இறைவன்: தீர்த்தேஸ்வரர்
அறிமுகம்
புவனேஸ்வர் தீர்த்தேஸ்வரர் கோயில் பழைய புவனேஸ்வரில் பிந்து சாகர் சாலையில் பபாணி சங்கர் கோயில் வளாகத்திற்கு எதிரே அமைந்துள்ளது, தீர்த்தேஸ்வரர் கோயில் (தீர்த்தேஷ்வரர் என்றும் அழைக்கப்படுகிறது) சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு சிறிய கோயில். 14 ஆம் நூற்றாண்டினை செர்ந்தது. முன்னால் சாலை உட்பட எல்லா பக்கங்களிலிருந்தும் அத்துமீறல்கள் இருப்பதால், கோயில் வளாகத்திற்குள் மழை நீர் தேங்கி, கருவறை பெரும்பாலும் வெள்ளத்தில் மூழ்கும் நிலை உருவாகிறது. கோயிலிலும் அதைச் சுற்றியும் வளர்ந்து வரும் காட்டு புற்கள், செடிக்கொடிகள் மற்றும் கருவேலமரங்களும் நினைவுச்சின்னத்திற்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றன. மரத்தின் வேர்கள் சுவர்களின் இடைவெளியை பெருக்கி அதன் மூலம் மழை நீரை கட்டமைப்புனுள் வர காரணமாகிறது.
காலம்
14 ஆம் நூற்றாண்டு
நிர்வகிக்கப்படுகிறது
இந்திய தொல்பொருள் ஆய்வு மையம் (ASI), ஒடிசா
அருகிலுள்ள பேருந்து நிலையம்
பிந்துசாகர் சாலை
அருகிலுள்ள இரயில் நிலையம்
லிங்கராஜ் கோயில் சாலை (LGTR)
அருகிலுள்ள விமான நிலையம்
புவனேஸ்வர்