புவனேஸ்வர் அகடாசண்டி கோயில், ஒடிசா
முகவரி
புவனேஸ்வர் அகடாசண்டி கோயில், பழைய நகரம், புவனேஸ்வர், ஒடிசா – 751002
இறைவன்
இறைவி: துர்கா
அறிமுகம்
இந்தியாவின் ஒடிசாவின் தலைநகரான புவனேஸ்வரில் அமைந்துள்ள அகடாசண்டி கோயில் துர்கா தேவிக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. சண்டி / மகிசாசுரமர்தினி / துர்கா தேவிக்கு அர்ப்பணிக்கப்பட்ட சில கோயில்களில் அகடாசண்டி கோயிலும் ஒன்றாகும். தற்போது, கோவிலை புவனேஸ்வர் நகராட்சி நிர்வாகம் கவனித்து வருகிறது. ஒடிசா மாநில தொல்லியல் துறையால் இக்கோயில் ஓரளவு புதுப்பிக்கப்பட்டுள்ளது
புராண முக்கியத்துவம்
அகடாசண்டி கோயில் கி.பி 10ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட சிறிய கோயிலாகும். கி.பி 10 ஆம் நூற்றாண்டில் ஆட்சி செய்த மன்னர்கள் மகிசாசுரமர்த்தினியின் தீவிர பக்தர்களாக இருந்தனர், ஏனெனில் அவள் போரின் வெற்றி தேவியாக கருதப்படுகிறாள். கோயிலின் முக்கிய பகுதியாக கருவறை உள்ள விமானம் உள்ளது. கருவறை மகிசாசுரமர்த்தினியின் சிலையைக் கொண்டுள்ளது மற்றும் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. விமானம் உள்ளே இருந்து 42.94 மீட்டர் உயரம் கொண்டது. கோயிலில் மூன்று நுழைவாயில்கள் உள்ளன. கோயில்களின் சுவர்களில் எந்தவிதமான அலங்காரங்களும், வேலைப்பாடுகளும் இல்லை.
திருவிழாக்கள்
தினசரி பூஜை மற்றும் சடங்குகள் தவிர, நவராத்திரி, துர்கா பூஜை, தீபாவளி மற்றும் பாலபோகா போன்ற பல்வேறு மத சடங்குகள் கோவிலில் செய்யப்படுகின்றன. இக்கோயிலில் கொண்டாடப்படும் மிக முக்கியமான திருவிழா ஒரிசாவில் கொண்டாடப்படும் மிகப்பெரிய திருவிழாக்களில் ஒன்றான துர்கா பூஜை ஆகும். துர்கா பூஜையின் காலம் பத்து நாட்கள் மற்றும் தசமி பண்டிகை என்று அழைக்கப்படுகிறது. பத்தாவது நாளில் துர்கா வெற்றி பெறுகிறார், எனவே துர்காவின் மகிழ்ச்சி, வீரம் மற்றும் சக்தியின் நாளாக கொண்டாடப்படுகிறது.
காலம்
கி.பி 10 ஆம் நூற்றாண்டு
நிர்வகிக்கப்படுகிறது
இந்தியத் தொல்லியல் துறை
அருகிலுள்ள பேருந்து நிலையம்
புவனேஸ்வர்
அருகிலுள்ள இரயில் நிலையம்
புவனேஸ்வர்
அருகிலுள்ள விமான நிலையம்
புவனேஸ்வர்