புழுதிகுடி திருமூலநாதர் கோயில், தஞ்சாவூர்
முகவரி :
புழுதிகுடி திருமூலநாதர் கோயில்,
புழுதிகுடி, திருவிடைமருதூர் வட்டம்,
தஞ்சாவூர் மாவட்டம் – 609003.
இறைவன்:
திருமூலநாதர்
இறைவி:
சௌந்தர்யநாயகி
அறிமுகம்:
கும்பகோணம் – அணைக்கரை சாலையில் பந்தநல்லூர் செல்லும் சாலையில் கீழகாட்டூர் சென்று அங்கிருந்து தெற்கில் இரண்டு கிமீ தூரம் சென்றால் புழுதிகுடி அடையலாம். அழகிய செங்கற்கோயில், மூன்று நிலை முகப்பு கோபுரம், மாடக்கோயிலாக இருந்து தற்போது ஒரு பகுதி இடிந்து போய் உள்ளது தரை மட்டத்தில் இருந்து பத்து அடி உயரத்தில் கிழக்கு நோக்கிய கருவறையும், தெற்கு நோக்கிய அம்பிகை கருவறையும் இருந்திருக்க வேண்டும். எஞ்சி நிற்பதை திருப்பணி செய்ய ஆரம்பித்து அதுவும் பாதியில் உள்ளது. கிழக்கு நோக்கி இறைவன் சன்னதி உள்ளது, தெற்கு நோக்கிய சிற்றாலயத்தில் அம்பிகை சிலைக்கு பதில் ஒரு லிங்கம் கிடத்தப்பட்டு உள்ளது பிரகாரம் பின்புறம் விநாயகர், முருகன் மகாலட்சுமி சிற்றாலயங்கள் உள்ளன.
விநாயகர் சிற்றலயத்தில் விநாயகரை காணவில்லை, விநாயகர் சன்னதி வாயிலில் ஒரு சங்கு ஏந்திய கரம் மட்டும் உள்ளது, அதற்க்கு சொந்தக்காரர் நிச்சயம் ஒரு துர்க்கையாக இருத்தல் வேண்டும். துர்க்கையை காணவில்லை. இப்படி பல இல்லைகள் உள்ள இக்கோயில் திருவாடுதுறை மடத்தின் உப கோயில் ஆகும். இறைவன்- திருமூலநாதர் (திரு-மலைநாதர் என்றே இருந்திருக்க வேண்டும்) இறைவி- சௌந்தர்யநாயகி.
#”உயர்திரு கடம்பூர் விஜய் அவர்களின் அன்புகூர்ந்த அனுமதியோடு அவர்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது”.
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
புழுதிகுடி
அருகிலுள்ள இரயில் நிலையம்
திருவிடைமருதூர்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி