புதுத்துறை சிவன் கோயில்
முகவரி
புதுத்துறை சிவன் கோயில், புதுத்துறை, சீர்காழி வட்டம், நாகப்பட்டினம் மாவட்டம்
இறைவன்
சிவன்
அறிமுகம்
சீர்காழி-சட்டநாதபுரம் ரவுண்டானாவில் கிழக்கு நோக்கி திரும்பி திருநகரி செல்லும் சாலையில் திருநகரிக்கு இரண்டு கிமி முன்னால் உள்ளது புதுத்துறை. ஊருக்குள் சென்று கோயிலை தேடி அலைந்தோம் ஏன்? கோயில் கோபுரம் மணிசத்தம் அய்யர் ,பூஜை, தேங்காய், பழம், சூடம் எண்ணை , விளக்கு எல்லாம் இழந்து எம்பெருமான் விடாப்பிடாயாக இன்னும் வீற்றிருக்கும் இடம் தான் தான் புதுத்துறை. பதினைந்தாம் நூற்றாண்டுகளில் கட்டபெற்ற கோயில் பராமரிப்பின்றி இடிந்து வீழ்ந்து கிடக்க, அம்மன் கோயில் செங்கல் என்பதால் வேர்கள் அனுமதியின்றி உள்ளே நுழைந்து கருவறையை துவம்சம் செய்தது காலத்தின் கொடுமை தானா? இல்லை நம் அலட்சியம் தானா? கல்வெட்டுக்களை பாருங்கள் வருடத்தினை கண்டுபிடியுங்கள்! கல்வெட்டின் ஆரம்பம் இருந்தால் எளிதாய் கண்டுபிடிக்க ஏதுவாக இருக்கும் என எண்ணி தேடிய இடம் மண் மூடிப்போயிருக்க, ஆனால் இங்கிருக்கும் மக்களின் இறைநம்பிக்கையும், வரலாற்று ஆர்வமும் இன்னும் மண் மூடிபோகவில்லை என சுற்றி பார்த்த போது தெரிந்தது. 27நட்சத்திரங்களுக்கும் உரிய மரங்களை நட்டு கூண்டு கட்டி பராமரிக்கின்றனர். சிதிலமடைந்த தென்மேற்கு மூலையில் விநாயகர் கோயிலை புதுப்பித்துள்ளனர். எம்பெருமானுக்கு சமீபகாலமாக தற்காலிக சிமென்ட் பலகை தடுப்பில் கருவறை அமைத்து பாதுகாத்து தமக்கு தெரிந்த அபிஷேக ஆராதனைகள் பூசைகள் செய்கின்றனர். இதனை நீங்களும் காண வேண்டும் என்பதற்காகவே கருவறை இறைவனை படமேடுப்பதில்லை என்ற எனது நிலைப்பாட்டை விட்டு படமேடுத்துள்ளேன். பிள்ளைக்கு கட்டிவிடலாம் அப்பனுக்கு கட்டுவது சாதாரணவிஷயமா என்ன!! முகநூல் நண்பர்களே “உடுக்கை இழந்தவன் கை போல ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு” எனும் குறட்பா சொல்வதை போல் இம்மக்களது இடுக்கண் களையும் பெருநிதியுடையோர் களம் இறங்குவீர் , ஏனையோர் இதனை அப்படிப்பட்டோருக்கு பகிர்ந்து விடவும்.
காலம்
1000 to 2000
நிர்வகிக்கப்படுகிறது
–
அருகிலுள்ள பேருந்து நிலையம்
வேதராஜபுரம்
அருகிலுள்ள இரயில் நிலையம்
சீர்காழி
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி
0