பீமாவரம் பீமேஸ்வரர் திருக்கோயில், (பீமேஸ்வராலயம்), ஆந்திரப்பிரதேசம்
முகவரி
பீமாவரம் பீமேஸ்வரர் திருக்கோயில், (பீமேஸ்வராலயம்), பீமாவரம், இராஜமுந்திரி (வழி), ஆந்திரப்பிரதேசம் – 534201.
இறைவன்
இறைவன்: பீமேஸ்வரர்
அறிமுகம்
ஆந்திர மாநிலம், கோதாவரி மாவட்டத்தில் உள்ள ஊர். ராஜமண்டிரியிலிருந்து 5 கி. மீ. தொலைவில் உள்ளது. விஜயவாடாவிலிருந்தும் செல்லப் பாதையுள்ளது. தற்போது “பீமாவரம்” என்று வழங்குகிறது. பிமீச்சுரம் என்னும் ஊர்ப் பெயர் திரிந்து விவீச்சுரம் என்று இருத்தல் கூடும் என்று சொல்லப்படுகிறது. இன்று கோயில் உள்ள பகுதி “பீமேஸ்வராலயம்” என்று வழங்குகிறது. இறைவன் பீமேஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். பஞ்சஹாராம் (ஐந்து தோட்டங்கள்) என்று சிறப்பாக வழங்கப்பெறும் ஐந்த சிவாலயங்களுள் பீமாவரமும் ஒன்று. ஏனையவை: 1. அமராவதி, 2. திராக்ஷாராமம், 3. சாமல்கோட்டை, 4. பீதாபுரம் (PITHAPUR) ஆகும். இது தக்ஷிணகயா எனப்படும். இத்தலம் அப்பர் திருவாக்கில் இடம்பெற்றுள்ள வைப்புத் தலமாகும்.
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
நிர்வகிக்கப்படுகிறது
இந்து சமய அறநிலையத் துறை
அருகிலுள்ள பேருந்து நிலையம்
பீமாவரம்
அருகிலுள்ள இரயில் நிலையம்
இராஜமுந்திரி
அருகிலுள்ள விமான நிலையம்
விஜயவாடா