பில்லாளி சௌந்தரேஸ்வரர் சிவன் கோயில், நாகப்பட்டினம்
முகவரி :
பில்லாளி சௌந்தரேஸ்வரர் சிவன் கோயில்,
பில்லாளி, நாகை வட்டம், நாகப்பட்டினம் மாவட்டம் – 610101
இறைவன்:
சௌந்தரேஸ்வரர்
இறைவி:
சௌந்தர நாயகி
அறிமுகம்:
காவிரியின் பிரிவுகளில் ஒன்றான விளப்பாறு விற்குடியில் பில்லாளி என பிரிந்து செல்கிறது. அதன் கரையில் உள்ள ஊர் தான் இந்த பில்லாளி. பில்லாளி எனும் ஊர் பல இடங்களில் உள்ளது எனினும் இதன் பொருள் தெரியவில்லை. இங்கு நானூறு ஆண்டுகளின் முன்னம் கட்டப்பட்ட ஒரு சிவன் கோயில் ஒன்றிருந்தது, சிவ வழிபாட்டின் மேன்மை அறியாமல் அதனை சிதிலமடைய விட்டுவிட்டனர் இவ்வூர் மக்கள். முற்றிலும் சிதைந்து போய் சில கருவறை சுவர்கள் மட்டும் மீதமுள்ளன. இங்கிருந்த மூர்த்திகள் அனைத்தும் அருகில் உள்ள விநாயகர் கோயிலில் தஞ்சம் அடைந்துள்ளன. இறைவி சௌந்தர நாயகி இறைவன் சௌந்தரேஸ்வரர் சுவாமி, அம்பாள், நந்தி,சண்டேசர் ஆகியோர் ஒரு கீற்று கொட்டகையில் உள்ளனர்.
#”உயர்திரு கடம்பூர் விஜய் அவர்களின் அன்புகூர்ந்த அனுமதியோடு அவர்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது”.
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
பில்லாளி
அருகிலுள்ள இரயில் நிலையம்
நாகப்பட்டினம்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி