பாலூர் சிவன் கோயில், மயிலாடுதுறை
முகவரி :
பாலூர் சிவன் கோயில்,
பாலூர், தரங்கம்பாடி வட்டம்,
மயிலாடுதுறை மாவட்டம் – 609312.
இறைவன்:
சிவன்
அறிமுகம்:
பொறையார் மேற்கில் நான்கு கிமீ தூரத்தில் உள்ள திருக்களாச்சேரியின் தெற்கில் ஒரு கிமீ தூரத்தில் உள்ளது பாலூர், சிறிய கிராமம் சுற்றிலும் நெல்வயல்கள். ஆங்காங்கே மரத்தடியில் வயற்காட்டு வேலையில் கிடைத்த ஓய்வில் தூக்கு வாளியை திறந்துகொண்டிருக்கும் பெண்கள், விநாயகர் காளியம்மன் சிவன்கோயில் என மூன்று சிறிய கோயில்கள். ஊரின் கடைசியில் கிழக்கு நோக்கிய ஒற்றை கருவறை கோயிலாக சிவன் உள்ளார். அருகில் காளியம்மன் கோயில் வடக்கு நோக்கியுள்ளது. சிறிய லிங்கம் இது ஒரு விரிவு படுத்தி கட்டப்பட்ட மன்மதன் கோயில் தான். எனினும் மக்கள் பெருமையாக சிவன்கோயில் என குறிப்பிடுகின்றனர்.
#”உயர்திரு கடம்பூர் விஜய் அவர்களின் அன்புகூர்ந்த அனுமதியோடு அவர்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது”.
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
பாலூர்
அருகிலுள்ள இரயில் நிலையம்
மயிலாடுதுறை
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி