பாலவாய் சொக்கநாதர் சிவன்கோயில், திருவாரூர்
முகவரி
பாலவாய் சொக்கநாதர் சிவன்கோயில் பாலவாய், திருவாரூர் வட்டம், திருவாரூர் மாவட்டம் – 610104.
இறைவன்
இறைவன்: சொக்கநாதர் இறைவி: காமாட்சி
அறிமுகம்
கும்பகோணம் – திருவாரூர் சாலையில் 9 கி.மீ முன்னதாக உள்ள வடகண்டத்துக்கு முன்னதாக வெட்டாறு செல்கிறது. அதன் தென் கரையில் (CUT) மத்தியஅரசு பல்கலைகழக சாலையில் சிறிது தூரம் சென்றால் உள்ளது இந்த பாலவை / பாலவாய் கிராமம். இந்த பாலவாய் மிக சிறிய கிராமம், மொத்தமா பத்து வீடுதான். இங்கு கிழக்கு நோக்கிய சிவாலயம் அமைந்துள்ளது. ஆலவாய் என பெயர் இருந்து பின்னர் பாலவாய் / பாலவை என மருவியுள்ளது எனலாம். இங்குள்ள இறைவனின் பெயர் சொக்கநாதர் ஆலவாய் அண்ணலின் பெயர். இறைவியின் பெயர் காமாட்சி என உள்ளது. உண்மையில் மீனாட்சி என்றே இருந்திருக்கவேண்டும். இருப்பது பத்து வீடு அதனினும் தள்ளி அமைந்துள்ளது சிவன்கோயில். பெரிய குளத்தின் கரையில் அமைந்துள்ளது. இறைவன் கிழக்கு நோக்கிய கருவறையும் இறைவி தெற்கு நோக்கிய கருவறை கொண்டும் உள்ளனர். இறைவன் முன்னர் ஒரு முகப்பு மண்டபம் உள்ளது கருவறை வாயிலில் விநாயகர் முருகன் வள்ளி தெய்வானை உள்ளனர். மண்டபத்தின் மறுபுறம் பைரவர், சூரியன் சந்திரன் உள்ளனர். கருவறை கோட்டத்தில் தென்முகன் மட்டும் உள்ளார். மகிழ மரத்தடியில் ஒரு அழகிய அம்பிகை இருத்தப்பட்டுள்ளது, சிதைவடைந்த அம்பிகையாக இருக்கலாம். வெளியூர் மக்கள் யாரும் நாடி வருவதாக தெரியவில்லை, நாம் சென்றபோதே இங்க கோயில் இருப்பது உங்களுக்கு எப்படி தெரியும் என்ற கேள்வி வந்தது!! திருவாரூர் இறைவனின் அஷ்ட திக்கு லிங்கங்களில் இவர் வடமேற்கு திக்கில் உள்ளவராகலாம். ஒருகால பூஜை நடைபெறுகிறது. # ” உயர்திரு கடம்பூர் கே.விஜயன் அவர்களின் அன்புகூர்ந்த அனுமதியோடு அவர்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது”.
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
பாலவாய்
அருகிலுள்ள இரயில் நிலையம்
திருவாரூர்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி