பழமத்தூர் காளஹஸ்தீஸ்வரர் சிவன் கோயில், செங்கல்பட்டு
முகவரி
பழமத்தூர் காளஹஸ்தீஸ்வரர் சிவன் கோயில், பழமத்தூர், மதுராந்தகம், செங்கல்பட்டு மாவட்டம் – 603 308
இறைவன்
இறைவன்: காளஹஸ்தீஸ்வரர்
அறிமுகம்
சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் செங்கல்பட்டு அடுத்து வரும் புக்கத்துறை பேருந்து நிறுத்தத்தில் இறங்கி கிழக்கு திசையில் பயணித்தால் சுமார் 1 கி.மி. தூரத்தில் உள்ளது பழமத்தூர் எனும் கிராமம். வயல்களைக் கடந்து சென்றால் கழனிகளுக்கு நடுவில் தீவு போல் அமைந்துள்ள இடத்தில முட் புதர்களுக்கு இடையில் காட்சி அளிக்கிறது இந்த சிவாலயம். முற்றிலுமாக சிதிலமடைந்த இந்த ஆலயத்தில் கருவறையில் ஸ்வாமி ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரர் மேற்கு நோக்கி காட்சி அளிக்கிறார். அம்பாள் விக்கிரகம் காணப்படவில்லை. உடைந்த நிலையில் இருக்கும் ஸ்ரீ தட்சிணாமூர்த்தி தவிர வேறு தெய்வ சிலைகள் ஏதும் இல்லை. தூண்களில் புடைப்பு சிற்பமாக ஸ்ரீவிநாயகர் மற்றும் முருகன் வடிவங்கள் உள்ளன. ஆலயத்தின் திருக்குளம் அருகில் இருக்கிறது. பூஜை ஏதும் இங்கு நடைபெறவில்லை. பௌர்ணமி அன்று மட்டும் இங்கு வந்து விளக்கு ஏற்றி வழிபடுகிறார்கள் கிராம மக்கள். தொடர்புக்கு திரு தியாகு-9003440655, திரு கோதண்டராமன்-9629579359, சுரேஷ்-9944303738 திரு சிவகுமார்-8007556866.
காலம்
1000 – 2000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
புக்கத்துறை
அருகிலுள்ள இரயில் நிலையம்
மதுராந்தகம்
அருகிலுள்ள விமான நிலையம்
சென்னை