பரங்கிப்பேட்டை முத்துக்குமர சுவாமி திருக்கோயில், கடலூர்
![](https://lightup-temples.s3.ap-south-1.amazonaws.com/wp-content/uploads/2022-07-10-2.jpg)
முகவரி :
அருள்மிகு முத்துக்குமர சுவாமி திருக்கோயில்,
பரங்கிப்பேட்டை,
கடலூர் மாவட்டம் – 608 502.
போன்: +91 84184 11058, 98940 48206
இறைவன்:
முத்துக்குமர சுவாமி
அறிமுகம்:
கடலூர் மாவட்டத்தில் முருகப்பெருமான், முத்துக்குமார சுவாமி பெயர்கொண்டு அருள்பாலிக்கும் திருத்தலமே முத்துக்கிருஷ்ணாபுரி என்று அழைக்கப்படும் பரங்கிப்பேட்டை. இந்த ஆலயத்தில் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் இத்தல முத்துக்குமார சுவாமியை தரிசனம் செய்தால், சத்ருக்கள் பயம் விலகும் என்பதே முக்கிய காரணமாகும். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் பழமை வாய்ந்த இந்தக் கோவில் யாரால் கட்டப்பட்டது என்று தெரியவில்லை. கொடி மரத்தையும், நந்தி மண்டபத்தையும் தாண்டியதும் விநாயகர் மற்றும் முருகன் சன்னிதியும், ஸ்ரீவிசுவநாதர்–ஸ்ரீவிசாலாட்சி சன்னிதிகளும் அமைந்துள்ளன. பிரகாரத்தில் ஆதிவிசாலாட்சி சமேத ஆதிவிசுவநாதர், பாலசுப்ரமணியர், ஸ்ரீநாகர், இந்திரனால் வழிபடப்பட்ட மகாலட்சுமி சன்னிதி ஆகியவை உள்ளன. சிவன் கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி, பிரம்மா, சிவசண்டிகேஸ்வரர் ஆகியோரும், முத்துக்குமாரசுவாமியின் மகாமண்டபத்தின் கோஷ்டத்தில் துர்க்கை, குகசண்டிகேஸ்வரர், சனீஸ்வரர் ஆகியோரும் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர்.
புராண முக்கியத்துவம் :
நமுசி என்ற அசுரன், எத்தகைய பலமான ஆயுதத்தாலும் தனக்கு அழிவு வரக்கூடாது என்று வரம் பெற்றிருந்தான். இதனால், ஆணவத்துடன் தேவர்களைத் துன்புறுத்தினான். இந்திரன் அவனுடன் போரிட்டு தோற்றான். தனக்கு அருளும்படி சிவனை வேண்டினான். சிவன் அவனிடம், இங்குள்ள கடலில் நுரையை எடுத்துத் அதை அசுரன் மீது வீசும்படி கூறினார். அசுரன் பெற்ற வரத்தின்படி, ஆயுதங்களால் தான் அவனுக்கு அழிவு உண்டாகாது. கடல் நுரை என்பது ஆயுதமாக கருத முடியாதென்பதால், அசுரனை அழிக்க சிவன் இவ்வாறு ஒரு தந்திரம் செய்தார். அதன்படி, இந்திரன் கடல் நுரையை வீச, அசுரன் அழிந்தான். மகிழ்ந்த இந்திரன் இங்கு சிவலிங்க பிரதிஷ்டை செய்து பூஜித்தான். இவர் விஸ்வநாதர் எனப் பெயர் பெற்றார். இவருக்கு “இந்திர லிங்கம்’ என்றும் பெயருண்டு. காலப்போக்கில் இவரது பரிவார மூர்த்தியாக எழுப்பப்பட்டட் முத்துத்க்குமர சுவாமி (முருகன்) சன்னதி எதிரில் கோபுரம், கொடிமரம் அமைக்கப்பட்டதால், இவர் பிரசித்தி பெற்று விட்டார். கோயிலும் அவரது பெயரிலேயே அழைக்கப்பட்டது.
நம்பிக்கைகள்:
நாகதோஷம் மற்றும் களத்திர தோஷத்தால் திருமணத்தடை உள்ளோர் இங்குள்ள நாகரை வழிபடுகின்றனர். பொருளை இழந்தவர்கள் மீண்டும் கிடைக்கவும், தெரிந்தோ, தெரியாமலோ பதவியிறக்கம் அல்லது வேலை இழந்தவர்கள் மீண்டும் பணி கிடைக்க சிவனை வழிபடுகின்றனர்.
சிறப்பு அம்சங்கள்:
இழந்தது கிடைக்க வழிபாடு: சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு ஈசான்ய திசையில் (வடகிழக்கு) அமைந்த தலம் இது. முருகன் சன்னதிக்கு வலப்புறம் விஸ்வநாதர் இருக்கிறர். அருகிலேயே தென்திசை நோக்கி விசாலாட்சி சன்னதி உள்ளது. பொருளை இழந்தவர்கள் மீண்டும் கிடைக்கவும், தெரிந்தோ, தெரியாமலோ பதவியிறக்கம் அல்லது வேலை இழந்தவர்கள் மீண்டும் பணி கிடைக்க சிவனுக்கு வஸ்திரம் அணிவித்து, சம்பார் சாதம் அல்லது பொங்கல் படைத்துத் வேண்டிக்கொள்கிறார்கள். விசாலாட்சி அம்பிகைக்கு வடை, சர்க்கரைப்பொங்கல் படைத்துத் லலிதா சகஸ்நாமம் பாராயணம் செய்து வணங்குகின்றனர்.
விசேஷ பிரம்மா: இந்திரன், இங்கு கார்த்திகை முதல் ஞாயிற்றுக் கிழமையில் வணங்கி அருள் பெற்றானாம். எனவே, இந்நாளில் இங்கு வழிபடுவது விசேஷம். கார்த்திகை திங்களில் 108 சங்காபிஷேகமும் நடக்கும். சிவன் கோயில்களில் கோஷ்டத்தில் (சுற்றுச்சுவர்) பிரம்மா, நின்ற நிலையில்தான் இருப்பார். இங்கு அமர்ந்து இரண்டு கைகளையும் கூப்பி, வணங்கிய நிலையில் இருக்கிறார். இவரது தரிசனம் மிக விசேஷம். அருகிலுள்ள துர்க்கை எட்டுகைகளுடன் காட்சியளிப்பது மற்றொரு சிறப்பு. வளர்பிறை அஷ்டமியன்று இவளுக்கு விசேஷ அபிஷேகத்துடன் பூஜை நடக்கும்.
தேன் பிரசாதம்: முத்துத்க்குமரர் முன்புறம் ஐந்து, பின்புறம் ஒன்று என ஆறு முகங்களுடன், இந்திர மயில் மீது அமர்ந்த நிலையில் காட்சி தருகிறார். கிருத்திகை நாட்களில் இவருக்கு விசேஷ அபிஷேகம் நடக்கும். செவ்வாய் தோறும் இவருக்கு “சத்ருசம்ஹார திரிசதி’ அர்ச்சனை நடக்கிறது. அப்போது, முருகனின் ஆறு முகங்களுக்கும் செவ்வரளி மாலை அணிவித்து, தனித்தனியே தீபாராதனை செய்து, தனித்தனி நைவேத்யத்துடன் பூஜை நடக்கும். இவ்வேளையில் இவருக்கு பிரதானமாக தேன் படைத்து, அதையே பிரசாதமாகத் தருவர். மலைப்பகுதியில் பிறந்த வள்ளியின் கணவன் என்பதன் அடிப்படையில், தேன் படைக்கின்றனர்.
அமாவாசை பூஜை: முன் மண்டபத்தில் 18 படிகளுடன் ஐயப்பன் சன்னதி உள்ளது. தமிழ் மாத பிறப்பு நாட்களில் இவருக்கு விசேஷ அபிஷேகத்துடன் பூஜை நடக்கும். அப்போது சுவாமி பிரகார வலம் வருவார். முன் மண்டபத்தில் உள்ள நடராஜர், ஆனி திருமஞ்சனம், மார்கழி திருவாதிரை என வருடத்தில் இருமுறை புறப்பாடாவார். வழக்கமாக பைரவருக்கு தேய்பிறை அஷ்டமி நாட்களில் தான் விசேஷ பூஜை நடக்கும். இங்கு, அமாவாசையன்று இரவில் பூஜை நடக்கிறது. பிரகாரத்தில் ஐந்து தலை நாகத்தின் கீழே ஐந்து நாகங்களுடன் நாகராஜா சன்னதி உள்ளது. இருபுறமும் இரண்டு நாக கன்னிகள் உள்ளனர். நாகதோஷம் மற்றும் களத்திர தோஷத்தால் திருமணத்தடை உள்ளோர் நாகருக்கு தாலி மற்றும் சிவப்பு வஸ்திரம் அணிவித்துத் வழிபடுகின்றனர். பிரகாரத்தில் ஆதிவிநாயகர், பாலசுப்பிரமணியர், மகாலட்சுட்மி, சனீஸ்வரர் மற்றும் நவக்கிரக சன்னதிகள் உள்ளன.
திருவிழாக்கள்:
நவராத்திரி, கந்தசஷ்டி, அன்னாபிஷேகம், திருக்கார்த்திகை, தைப்பூசம், சிவராத்திரி, பங்குனி உத்திரம். கந்தசஷ்டி விழாவின்போது தெய்வானை திருக்கல்யாணமும், தைப்பூசத் திருவிழாவின்போது வள்ளி திருக்கல்யாணமும் நடக்கிறது. தைப்பூசத்தன்று முருகன் சுவேதா நதிக்கும் (வெள்ளாறு), மாசி மகத்தன்று வங்காள விரிகுடா கடலுக்கும் சென்று தீர்த்த்வாரி காண்பார்.
![](https://52.66.9.118/wp-content/uploads/2023/02/2022-07-10-1.jpg)
![](https://52.66.9.118/wp-content/uploads/2023/02/2022-07-10-2.jpg)
![](https://52.66.9.118/wp-content/uploads/2023/02/2022-07-10-3.jpg)
![](https://52.66.9.118/wp-content/uploads/2023/02/2022-07-10.jpg)
![](https://52.66.9.118/wp-content/uploads/2023/02/286678865_7559534147452963_8843266566361438857_n-1024x771.jpg)
![](https://52.66.9.118/wp-content/uploads/2023/02/286707799_7559536227452755_4434543645583822415_n-1024x771.jpg)
![](https://52.66.9.118/wp-content/uploads/2023/02/286715636_7559535807452797_3368339919815403735_n-771x1024.jpg)
![](https://52.66.9.118/wp-content/uploads/2023/02/287135998_7559534574119587_4470295016664756446_n-1024x771.jpg)
![](https://52.66.9.118/wp-content/uploads/2023/02/287245845_7559534224119622_8915005429722184477_n-771x1024.jpg)
![](https://52.66.9.118/wp-content/uploads/2023/02/287323882_7559534140786297_4224060543431818770_n-1024x771.jpg)
![](https://52.66.9.118/wp-content/uploads/2023/02/287325739_7559536327452745_5613340113995464333_n-771x1024.jpg)
![](https://52.66.9.118/wp-content/uploads/2023/02/287476881_7559535067452871_7751711163115460963_n-1024x771.jpg)
![](https://52.66.9.118/wp-content/uploads/2023/02/287963806_7559534817452896_6718553643500981647_n-771x1024.jpg)
![](https://52.66.9.118/wp-content/uploads/2023/02/287992435_7559535087452869_6370763097319499651_n-1024x771.jpg)
![](https://52.66.9.118/wp-content/uploads/2023/02/288052025_7559535467452831_4116843722708770219_n-771x1024.jpg)
![](https://52.66.9.118/wp-content/uploads/2023/02/288453853_7559536864119358_3793801787832424971_n-771x1024.jpg)
![](https://52.66.9.118/wp-content/uploads/2023/02/288469469_7559536870786024_6672142297061850555_n-1024x771.jpg)
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
பரங்கிப்பேட்டை
அருகிலுள்ள இரயில் நிலையம்
கடலூர்
அருகிலுள்ள விமான நிலையம்
பாண்டிச்சேரி