Saturday Nov 23, 2024

பட்டமங்கலம் காசிவிஸ்வநாதர் திருக்கோயில், நாகப்பட்டினம்

முகவரி :

பட்டமங்கலம் காசிவிஸ்வநாதர் திருக்கோயில்,

பட்டமங்கலம், கீழ்வேளுர் வட்டம்,

நாகை மாவட்டம் – 611104.

இறைவன்:

காசிவிஸ்வநாதர்

இறைவி:

விசாலாட்சி

அறிமுகம்:

 கீழ்வேளூர் – தேவூர் சாலையில் உள்ளது இந்த பட்டமங்கலம், கிவளூரில் இருந்து தெற்கில் 2 ½ கிமீ தூரத்தில் உள்ளது. காசிவிஸ்வநாதர் கோயில் சிறிய கிழக்கு நோக்கிய கோயில் இதனை பழம்பெரும் கோயில் என கூற இயலாது, காசி சென்று வந்தோர் சில நூறாண்டுகளின் முன்னம் எழுப்பிய கோயிலாகலாம். இறைவன் விஸ்வநாதர் இறைவி விசாலாட்சி விஸ்வநாதர் கிழக்கு நோக்கிய கருவறை கொண்டுள்ளார், விசாலாட்சி தெற்கு நோக்கியுள்ளார், இறைவன் எதிரில் நந்தி உயர்ந்த தனி மண்டபம் கொண்டுள்ளார், தென்புறம் கோட்டத்தில் தக்ஷணமூர்த்தி, மற்றும் வடக்கில் துர்க்கை உள்ளார். பிரகாரத்தில் விநாயகர் சிற்றாலயம் உள்ளது அவருக்கு காரியசித்தி விநாயகர் என பெயரிட்டுள்ளனர். கருவறையின் நேர் பின்புறம் ஒரு திருமால் நின்ற கோலத்தில் உள்ளார். இவர் இக்கோயிலை சார்ந்த தெய்வமா அல்லது வைணவ கோயில் இருந்து சிதைவுற்றதா என தெரியவில்லை. வடக்கில் முருகன் சன்னதி உள்ளது நவகிரகங்கள் தனியாக ஒரு மண்டபத்தில் உள்ளது.

காலம்

1000 ஆண்டுகள் பழமையானது

அருகிலுள்ள பேருந்து நிலையம்

பட்டமங்கலம்

அருகிலுள்ள இரயில் நிலையம்

நாகப்பட்டினம்

அருகிலுள்ள விமான நிலையம்

திருச்சி

Location on Map

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top