Wednesday Nov 27, 2024

நாகப்பட்டினம் அமரநந்தீஸ்வரர் திருக்கோயில்

முகவரி :

நாகப்பட்டினம் அமரநந்தீஸ்வரர் திருக்கோயில்,

நாகப்பட்டினம் வட்டம்,

நாகப்பட்டினம் மாவட்டம் – 611003.

இறைவன்:

அமரநந்தீஸ்வரர்

இறைவி:

அபிதகுஜாம்பாள்

அறிமுகம்:

நாகை பன்னிரு திருக்கோயில்களில் அமரநந்தீஸ்வரர் கோயில் இறைவன் இந்திரனால் வழிபட்டவராவார். நாகை நீலாயதாட்சி அம்மன் கோயில் சன்னதி தெரு அமைந்துள்ள தேரடி நுழைவாயில் அருகேயே இக்கோயில் உள்ளது. சிறிய கோபுரவாசல் உடன் கிழக்கு நோக்கியுள்ளது. தேவர்தலைவன் இந்திரனால் வழிபட்ட இறைவன் என்பதால் அமர-இந்திர-ஈஸ்வரர் அமரேந்தீஸ்வரர் என பெயர் வந்தது தற்போது அமர நந்தீஸ்வரர் என மக்கள் அழைக்கின்றனர்.

ஆலய முகப்பு மொட்டை கோபுரத்தில் இந்திரன் சிவனை வழிபடுவது போன்ற சிற்பம் அமைக்கப்பட்டுள்ளது. அதை தொடர்ந்து உள்ளே செல்லும்போது மூலஸ்தானத்தை எதிர்நோக்கி நந்தியும், பலிபீடமும் பெரிய செப்பு கொடிமரமும் உள்ளன. கருவறையில் பெரிய பாணன் கொண்டு விளங்கும் இறைவனை காணலாம். கருவறை வாயிலில் இரு விநாயக மூர்த்திகள் உள்ளனர். கருவறை இறைவனை வணங்கிய நிலையில் ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் சிலை உள்ளது, நகரத்தாரின் சிலைகளா என அறியமுடியவில்லை.

இறைவன் முன்னர் அர்த்தமண்டபம் மகாமண்டபம் உள்ளன. அம்பிகை அபிதகுஜாம்பாள் தெற்கு நோக்கியுள்ளார் இறைவன் கருவறை கம்பீரமான சோழ கட்டுமானம் என பார்த்தவுடன் தெரிகிறது. கோஷ்டத்தில் நர்த்தனகணபதி அடுத்து தட்சணாமூர்த்தி லிங்கோத்பவர் பிரம்மா சூலினிதுர்க்கை பிரகாரத்தில் பெரியதொரு மாமரம் ஒன்று படர்ந்து நிற்கிறது, ராஜகணபதி, பாலமுருகன் லட்சுமி சரஸ்வதி ஆஞ்சநேயர் வடகிழக்கில் பைரவர் மற்றும் நவகிரகங்களும் உள்ளன. இந்திரன் உருவாக்கிய வஜ்ர கங்கை தீர்த்த கிணறு உள்ளது. பங்குனி உத்திரத்தில் பிரம்மோற்சவம் நடக்கிறது.

புராண முக்கியத்துவம் :

 அகலிகையை அடைய எண்ணிய இந்திரன் கவுதம முனிவரால் சாபம் பெற்றான். சாபவிமோசனம் பெற விநாயகரை வணங்கியதால் இங்கே சாபம் தீர்த்த விநாயகர் கோயில் உள்ளது. பின்னர் காயாரோகணரை வணங்கி வந்தான் அப்போது பூஜை தடைபடவே தனியாக இவ்விடம் லிங்கம் அமைத்து சாபம் தீர பூஜை செய்தான் என்பது வரலாறு.

காலம்

1000 ஆண்டுகள் பழமையானது

அருகிலுள்ள பேருந்து நிலையம்

நாகப்பட்டினம்

அருகிலுள்ள இரயில் நிலையம்

நாகப்பட்டினம்

அருகிலுள்ள விமான நிலையம்

திருச்சி

Location on Map

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top