நயம்பாடி ஸ்ரீ ஜலகண்டேஸ்வரர் கோவில், சேலம்
முகவரி
நயம்பாடி ஸ்ரீ ஜலகண்டேஸ்வரர் கோவில், இந்திரா நகர், மேட்டூர் அணை, சேலம் – 636401, தமிழ்நாடு
இறைவன்
இறைவன்: ஸ்ரீ ஜலகண்டேஸ்வரர்
அறிமுகம்
நயம்பாடி ஸ்ரீ ஜலகண்டேஸ்வரர் கோவில் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் சேலம் மாவட்டம், நயம்பாடி கிராமத்தில் அமைந்துள்ளது. இந்த கோவில் மேட்டூர் அணையின் மையத்தில் அமைந்துள்ளது. இது தென்னிந்தியாவின் மிகப்பெரிய அணை ஆகும். அணை நிரம்பும் போது வரலாற்று சிறப்புமிக்க நந்தி சிலை முழுமையாக மூழ்கிவிடுகிறது. தற்போது முழுமையாக வெளிவந்துள்ளது. ஜலகண்டேஸ்வரர் கோவில் கோபுரம், நந்தி சிலைக்கு பின்புறம் உள்ளது. மேட்டூர் அருகே காவிரியில் உள்ள நீர் மட்டம் ஐம்பது அடிக்கு கிழே செல்லும் போது மட்டுமே இந்த கோவில் தோன்றும். ஜலகண்டேஸ்வரர் கோவில் சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பு மைசூர் இராஜ்ஜியத்தின் ஆட்சியாளர்களால் கட்டப்பட்டது, ஸ்டான்லி நீர்த்தேக்கத் திட்டத்திற்கு வசதியாக கிராம மக்கள் இடம்பெயர வேண்டியிருந்தது. அவர்கள் நந்தி சிலையையும் கோவிலையும் இடிக்கவில்லை. நந்தி சிலை மற்றும் கோவிலுக்கு சேதம் இல்லை என்றாலும் நீர் மட்டம் உயரும் போதெல்லாம் அவை மூழ்கிவிடுகிறது.
காலம்
300 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
நயம்பாடி
அருகிலுள்ள இரயில் நிலையம்
சேலம்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி