நமசிவாயபுரம் கஞ்சமலைநாதர் சிவன் கோயில், திருவாரூர்

முகவரி :
நமசிவாயபுரம் கஞ்சமலைநாதர் சிவன்கோயில்,
நமசிவாயபுரம், திருத்துறைபூண்டி வட்டம்,
திருவாரூர் மாவட்டம் – 606202.
இறைவன்:
கஞ்சமலைநாதர்
இறைவி:
ஞானாம்பிகை
அறிமுகம்:
திருவாரூர் – திருத்துறைப்பூண்டி நெடுஞ்சாலையில், திருவாரூரை அடுத்து, 14 ஆவது கி.மீல் ‘திருநெல்லிக்கா’ என்று வழி காட்டி உள்ள இடத்தில் பிரியும் சாலையில் சென்று, ‘புதூர்’ பாலத்தடி ஊரையடைந்து, அதைத்தாண்டி வெண்ணாற்றின் வடகரையை ஒட்டியே சென்றால் சாலையை ஒட்டி ஒரு மாரியம்மன் கோயில் ஒட்டி சிறிய தெரு செல்கிறது அதில் சென்றால் சிவன்கோயில் அடையலாம். இக்கோயில் இருக்குமிடத்தின் அருகில் சந்திரா நதியின் கிளை ஒன்று வெண்ணாற்றில் கூடுகிறது, இந்த கூடலில் முன்பு தீர்த்தவாரி நடைபெற்றதாம்.
கந்தர்வன் ஒருவனின் குஷ்ட நோய் இத்தலத்தில் நீங்கியது. அவன் நீராடிய ரோகநிவாரண தீர்த்தம் கோயிலின் வடபுறம் உள்ளது.பல காலம் பழுதடைந்த நிலையில் இருந்த இக்கோயில் புனரமைக்கப்பட்டு அழகுடன் காட்சியளிக்கிறது. கிழக்கு நோக்கிய கோயில் முகப்பில் கோபுரம் ஏதுமில்லை சிறிய வாயிலின் மேல் ஒரு லிங்கம் மட்டும் காட்டப்பட்டுள்ளது.
முற்றிலும் செங்கல் கொண்டு கட்டப்பட்ட கோயில், துவிதளம் கொண்ட விமானத்துடன் கூடிய கருவறை இடைநாழி முகப்பு மண்டபம் நந்தி மண்டபம் என உள்ளது. இறைவியின் கருவறை தெற்கு நோக்கி உள்ளது. அவரின் முன்னர் முகப்பு மண்டபம் சேர்கிறது. இது ஒரு சோழர்கள் கால கோயில் தான் எனினும் இடைப்பட்ட காலங்களில் மாற்றம் கண்டுள்ளது. கருவறை சுவற்றில் சிறிய மாடங்களில் நர்த்தன விநாயகர் தென்முகன், மகாவிஷ்ணு பிரம்மா உள்ளனர்.
துர்க்கை ராஜதுர்க்கை எனும் பெயரில் ஒரு சிம்ம வாகனத்தில் எட்டு கரங்களுடன் காட்சியளிக்கிறார். இவருக்கு கோயிலின் தென்புறம் கிழக்கு நோக்கிய சிற்றாலயம் அமைக்கப்பட்டுள்ளது. வழமைபோல் விநாயகர் வள்ளி தெய்வானை முருகன் சண்டேசருக்கு சிற்றாலயங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
வரலாற்றை நினைவுறுத்தும் வண்ணம் கருவறை வடக்கில் ஒரு பெரிய நாவல் மரத்தின் கீழ் சூலக்கல் ஒன்றும் மகாவிஷ்ணு உடைந்த வள்ளி தெய்வானை சிலைகள் உள்ளன. சூலக்கல் என்பது சோழர்கள் கோயில் நிலங்களை அடையாளம் காண அமைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. வடகிழக்கில் உள்ள மண்டபத்தில் நவகிரகங்கள், கால பைரவர், சனிபகவான் சில நாகர்கள் மற்றும் ஒரு லிங்க பாணன் ஒன்றும், லிங்கமூர்த்தியும் உள்ளன.
இறைவன் – கஞ்சமலைநாதர் இறைவி- ஞானாம்பிகை
இக்கோயில் பார்த்தசாரதி எனும் ஒரு இறை அடியாரால் பூஜை செய்யப்படுகிறது. பழுதடைந்து கிடந்த இக்கோயிலை மீளுருவாக்கம் செய்ய தனது மகனின் திருமணதிற்கு வந்த மொய் பணம் முழுதும் ஈசனின் திருப்பணிக்கு ஈந்த தந்தை. அவரது பெயர் திரு.பார்த்தசாரதி – 99445 86108 இவருக்கு அனைத்து வகையிலும் உதவியாக இருக்கும் இதே ஊரை சார்ந்த தொண்டர் திரு.செல்வகுமார் 8678900455










காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
நமசிவாயபுரம்
அருகிலுள்ள இரயில் நிலையம்
திருவாரூர்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி