தையூர் ஸ்ரீ முருகீஸ்வரர் திருக்கோயில், (பரிகார தலம்), செங்கல்பட்டு
முகவரி
தையூர் ஸ்ரீ முருகீஸ்வரர் திருக்கோயில், சிவன் கோயில் தெரு, தவேஷ் அவன்யூ, தையூர், செங்கல்பட்டு மாவட்டம்- 603103.
இறைவன்
இறைவன்: ஸ்ரீ முருகீஸ்வரர் இறைவி : ஸ்ரீ மரகதாம்பிகை
அறிமுகம்
சென்னை மாமல்லபுரம் சாலையில் கேளம்பாக்கத்திலிருந்து சுமார் 2 கி.மி. மேற்கு திசையில் அமைந்துள்ள தையூர் எனும் கிராமத்தில் ஒரு காலத்தில் 7 சிவாலயங்கள் இருந்தன. தற்போது 3 கோயில்களே வழிபாட்டில் உள்ளன. அவைகளில் ஒன்றூ ஸ்ரீ முருகீஸ்வரர் ஆலயம். ஸ்ரீ முருகப்பெருமான் இறைவனை பூஜித்ததாக வரலாறு. அதன் காரணமாக முருகீஸ்வரர் எனும் திருநாமத்தோடு விளங்குகிறார். ஸ்ரீ முருகப்பெருமானும் இங்கு சுயம்புவாக எழுந்தருளியுள்ளார். அம்பாள் ஸ்ரீ மரகதாம்பிகை என்று அழைக்கப்படுகிறார். கொடிமரம், பஞ்ச கோஷ்டங்கள், விநாயகர், சூரியன், பைரவர், நவகிரக சன்னதிகள் உள்ளன. ஒரு கால பூஜை. தொடர்புக்கு திரு ராமமூர்த்தி- 7299552933, திரு கண்ணன்-9790825558, திரு ராஜேஷ்-9941745535.
நம்பிக்கைகள்
பரிகார தலம்: அனைத்து கிரக தோஷங்களுக்கும் பரிகாரம் அளிக்கும் தலமாக கருதப்படுகிறது.
காலம்
1000 – 2000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
தையூர்
அருகிலுள்ள இரயில் நிலையம்
வண்டலூர்
அருகிலுள்ள விமான நிலையம்
சென்னை