தென்கோடி ருத்ரகோடீஸ்வரர் (தென்கோடிநாதர்) திருக்கோயில், தஞ்சாவூர்
முகவரி
தென்கோடி ருத்ரகோடீஸ்வரர் (தென்கோடிநாதர்) திருக்கோயில், பஞ்சநதிக்குளம் கிழக்கு, மருதூர் வழி, வேதாரண்யம் வட்டம், தஞ்சாவூர் மாவட்டம் – 614714.
இறைவன்
இறைவன்: ருத்ரகோடீஸ்வரர் இறைவி: திரிபுரசுந்தரி
அறிமுகம்
தென்கோடி ருத்ரகோடீஸ்வரர் கோயில் தஞ்சாவூர் மாவட்டத்தில் வேதாரண்யம் வட்டத்தில் உள்ள தேவார வைப்புத்தலமாகும். திருத்துறைப்பூண்டியிலிருந்து மருதூர் இரட்டைக்கடியடி வழியாக பஞ்சநதிக்குளம் கிழக்கு பகுதிக்கு அருகே கோயில் உள்ளது. ‘செம்மண் நதி’ முதலிய ஐந்து நதிகள் பாய்கின்ற பகுதியாதலின் இப்பகுதி ‘பஞ்சநதிக்குளம்’ என்று பெயர் பெற்றது. கோயில் முழுவதும் நிரம்ப கல்வெட்டுக்கள் உள்ளன. இங்குள்ள இறைவன் ருத்ரகோடீஸ்வரர் ஆவார். இறைவி திரிபுரசுந்தரி ஆவார். திருச்சுற்றில் விநாயகர், சுப்பிரமணியர், பைரவர், சூரியன், நாத லிங்கம், சந்திரன், சனி பகவான் சன்னதிகள் உள்ளன. மூலவர் சன்னதியின் வலது புறம் இறைவியின் சன்னதி உள்ளது. இத்தலம் சம்பந்தர் திருவாக்கில் இடம்பெற்றுள்ள சோழ நாட்டு வைப்புத் தலமாகும்.
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
நிர்வகிக்கப்படுகிறது
இந்து சமய அறநிலையத் துறை
அருகிலுள்ள பேருந்து நிலையம்
தென்கோடி
அருகிலுள்ள இரயில் நிலையம்
மன்னார்குடி
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி