திருவோணமங்கலம் சங்கடஹர மங்கள மாருதி ஆஞ்சநேயர் திருக்கோயில், திருவாரூர்

முகவரி :
அருள்மிகு சங்கடஹர மங்கள மாருதி ஆஞ்சநேயர் திருக்கோயில்,
திருவோணமங்கலம்,
திருவாரூர் மாவட்டம் – 612801.
இறைவன்:
ஆஞ்சநேயர்
அறிமுகம்:
திருவாரூர் மாவட்டம் ஆலங்குடியில் விசேஷமான குரு தலமாகிய முல்லைவனநாதர் கோயிலுக்கு அருகே திருவோணமங்கலம் ஆலங்குடியில் ஆஞ்சநேயரை மூலவராகக் கொண்ட சங்கடஹர மங்கள மாருதி கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் வளாகம் ஞானபுரி சித்திரகூட சேத்திரம் என்று அழைக்கப்படுகிறது. மிக அழகான சிற்ப வேலைப்பாடுகளுடன் பிரம்மாண்டமாக கோயில் விமானம் அமைந்திருக்கிறது. கும்பகோணத்தில் இருந்து 15 கிலோமீட்டர் தூரத்தில் மன்னார்குடி செல்லும் சாலையில் திருவோணமங்கலம் ஞானமொழி சங்கடஹர மங்கல மாருதி திருக்கோயில் அமைந்துள்ளது. ஆலங்குடி குரு தளத்தில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் கோவில் உள்ளது.
புராண முக்கியத்துவம் :
நீளமான முகப்பு மண்டபத்தை அடுத்து கருவறையில் 33 அடி உயரத்தில் விஸ்வரூப ஆஞ்சநேயர் தரிசனம் தருகிறார். இந்த அனுமன் தான் அணிந்திருக்கும் வேஷ்டியில் இடது பக்கத்தின் மேலே நான்குவித மூலிகைகளை செருகி வைத்திருப்பது வித்தியாசமான தோற்றம். இதற்கும் ஓர் உதாரணம் சொல்லப்படுகிறது. இந்த ஆஞ்சநேயர் சிலையை வடிவமைத்தபோது ஸ்தபதியின் கனவில் ஆஞ்சநேயர் தோன்றி நான்கு விதமான மூலிகைகளின் வடிவத்தை உணர்த்தினாராம். அதை அப்படியே ஆஞ்சநேயர் இடுப்பில் செருகிக்கொண்டு இருப்பது போல் தத்ரூபமாக செதுக்கப்பட்டிருக்கிறார்.
பக்தர்கள் ஆஞ்சநேயரின் இடத்திலிருக்கும் மூலிகைகளை கவனித்து பார்ப்பதற்காக அதன் மேல் எப்போதும் சந்தனம் பூசப்பட்டு இருக்கிறது. விசல்ய கரணி, ஷாகர்ண்ய கரணி, சந்தானகரணி, சஞ்சீவினி என்ற ஆஞ்சநேயர் வைத்திருக்கும் 4 மூலிகைகளில் சஞ்சீவினி உயிர் காக்கும் மூலிகை மற்றுவை நரம்பு, எலும்பு, தோல் சம்பந்தமான நோய்களைத் தீர்ப்பவையாம். எனவே இங்கு வந்து ஆஞ்சநேயரை வழிபட்டு பக்தர்களுக்கு இத்தகைய பிணிகள் வராது என்றும் பாதிக்கப்பட்டவர்கள் வந்து வணங்கினால் விரைவில் நோய் நீங்கும் எனவும் நம்பப்படுகிறது.
ஆஞ்சநேயர் வலதுபுற தனி சன்னதியில் மகா லட்சுமி தாயாருடன் லட்சுமி நரசிம்மர் சாந்த முகத்துடன் எழுந்தருளியுள்ளார். இடதுபுறம் கோதண்ட ராமர் சீதாதேவி லட்சுமணர் ஆஞ்சநேயர் உடன் சேவை சாதிக்கிறார். 2011 ஆம் ஆண்டு ஞானபுரி சித்திரக்கூட ஷேச்த்ர வளாகத்தில் வெட்டவெளியில் ஆஞ்சநேயர் கோயிலுக்கு யந்திர பிரதிஷ்டை செய்யப்பட்டது தொடர்ந்து திருப்பணிகள் நடந்து கொண்டிருந்தபோது திடீரென்று நான்கு ஐந்து ஆண்டுகள் அதில் தொய்வு ஏற்பட்டது. அப்போது தேவப்பிரசன்னம் பார்க்கும் போது குருவருளால் கோயில் திருப்பணி நடைபெறும் எனவும், இதனால் பல நன்மைகள் கிடைக்கும் என்பதையும் குறிப்பிடத்தான் மக்களுக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கும் என்று உத்தரவு கிடைத்ததாம்.
அதன்படி கர்நாடக மாநிலத்தில் ஷகடபுரத்தில் ஆதிசங்கரர் வழிவந்த ஜகத்குரு சங்கராச்சாரியார் சமஸ்தான ஸ்ரீ வித்யா பீடம் மூலமாக இவ்வாலயம் கட்டும் பணி தொடர்ந்து முடிந்து முடிந்துள்ளது. ஜகத்குரு ஸ்ரீ சங்கராச்சார்ய சமஸ்தான ஸ்ரீவித்யா பீடமும் இங்கு அமைந்துள்ளது. 2020ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் இந்த கோவிலில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
திருவிழாக்கள்:
சங்கடஹர மங்கள மாருதி சுவாமிகு அமாவாசை சனிக்கிழமைகள் மற்றும் மூல நட்சத்திர நாட்களில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. அதுபோலவே லட்சுமி நரசிம்மருக்கு புதன் கிழமைகள் மற்றும் சுவாதி நட்சத்திர நாட்களிலும், கோதண்டராமர் ஞாயிற்றுக்கிழமைகள், புணர்வசு நட்சத்திர நாட்களிலும், விசேஷ திருமஞ்சனம் ஆராதனைகள் நடக்கின்றன.






காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
நிர்வகிக்கப்படுகிறது
இந்து சமய அறநிலையத்துறை
அருகிலுள்ள பேருந்து நிலையம்
திருவோணமங்கலம்
அருகிலுள்ள இரயில் நிலையம்
கும்பகோணம்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி