திருவெள்ளறை வடஜம்புநாதர் குடைவரைக்கோயில், திருச்சி
முகவரி
திருவெள்ளறை வடஜம்புநாதர் குடைவரைக்கோயில், தில்லம்ப்பட்டி, திருவெள்ளறை, திருச்சி மாவட்டம்- 621009.
இறைவன்
இறைவன்: வடஜம்புநாதர்
அறிமுகம்
திருச்சி வெள்ளறைச் சாலையில் வெள்ளறைக்குச் சற்று முன்னால் இடப்புறத்தே காட்சித்தரும் சிறு குன்றில் அமைந்துள்ளது வடஜம்புநாதர் குடைவரை. இருபுறத்தும் அமைந்த படியமைப்புடன் மதிலால் சூழப்பட்டுள்ள இக்கோயில் வளாகத்தின் தென்மேற்கிலுள்ள ஒருதள நாகரத் திருமுன்னில் விநாயகர் இடம்பெற்றுள்ளார். தாய்ப்பாறையில் வெட்டப்பட்டுள்ள பிள்ளையார் மற்றும் விஷ்ணுவின் சிற்பங்கள் பாண்டியர் கலைப்பாணியைப் புலப்படுத்துபவை. அகிலாண்டேசுவரி, இரண்டு நந்திகள் , சிவப்பெருமான் , ஆறுமுகனுடன் வள்ளி முதலிய சிற்பங்கள் அமைந்துள்ளன. முன்மண்டபம் முற்காலச் சோழர் பாணியைக் காட்டுகின்றது. வாயிற்காவலர்களின் எழில் சோழர் கலைப்பாணியாகும். கோயில் வளாகத்தின் வெளிப்புறத்தில் காணப்படும் இரண்டு எழுவர் அன்னையர் சிற்பத்தொகுதிகள் இடம்பெற்றுள்ளன. மேலும் ஜம்பு முனிவர் , பைரவர் , ஆலமர் அண்ணல், அப்பர், சண்டேசுவரர், மகிஷமர்த்தினி ஆகிய பிற சிற்பங்களும் இங்கு காணப்படுகின்றன. குடைவரை இறைவனைச் சுட்டும் பழைமையான் கல்வெட்டு முதலாம் வரகுணருடையதாக் இருப்பதாக கருதப்படுவதால், கி.பி எட்டாம் நூற்றாண்டின் இறுதிக் காலத்தில் இக்குடைவரை அகழப்பட்டதாகக் கொள்ளலாம்
காலம்
1000 – 2000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
வெள்ளறை
அருகிலுள்ள இரயில் நிலையம்
திருச்சி
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி