திருமயம் கோட்டை சிவன் குடைவரை கோயில், புதுக்கோட்டை
முகவரி
திருமயம் கோட்டை சிவன் குடைவரை கோயில், திருமயம், புதுக்கோட்டை மாவட்டம் – 622507.
இறைவன்
இறைவன்: சிவன்
அறிமுகம்
திருமயம் கோட்டையின் உள்ளே மேல்பகுதியில் கோட்டையின் மேற்குப் பகுதியில் ஒற்றை அறையுடன் குகை வடிவில் அகழப்பட்ட குடைவரைக் கோவில் ஒன்று சிவனுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. குடைவரைக் கோவிலிலுள்ள தரையின் நடுவில் தாய்ப்பாறையில் ஒரு சிவலிங்கம் செதுக்கப்பட்டுள்ளது. இந்த லிங்கத்தின் ஆவுடை சதுரவடிவமாக அமைந்துள்ளது சிறப்பு. குகையின் நுழைவாயிலில் பக்கத்திற்கொன்றாக இரண்டு அரைத்தூண்களும் மேலே விட்டமும் அமைந்துள்ளன. குகைக்குச் செல்ல இந்தியத் தொல்லியல் அளவீட்டுத் துறையினர் இரும்பில் ஏணிப்படிக்கட்டுகள் அமைத்துள்ளனர். உட்கோட்டைக்கு ஊரின் மேற்குப் பகுதியிலிருந்து இந்தியத் தொல்லியல் அளவீட்டுத் துறையால் பாதுகாக்கப்படுகின்ற நுழைவாயில்கள் உள்ளன.
காலம்
1000 – 2000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
திருமயம்
அருகிலுள்ள இரயில் நிலையம்
புதுக்கோட்டை
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி