திருக்கழுக்குன்றம் உருத்திரகோடீஸ்வரர் திருக்கோயில், காஞ்சிபுரம்
முகவரி
திருக்கழுக்குன்றம் உருத்திரகோடீஸ்வரர் திருக்கோயில், ருத்திரன் கோயில், திருக்கழுக்குன்றம் காஞ்சிபுரம் மாவட்டம் – 603109.
இறைவன்
இறைவன்: ருத்ரகோடீஸ்வரர் இறைவி: திரிபுரசுந்தரி / அபிராமசுந்தரி
அறிமுகம்
திருக்கழுக்குன்றம் உருத்திரகோடீசுவரர் கோயில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள தேவார வைப்புத்தலமாகும். திருக்கழுக்குன்றத்தில், அடிவாரக்கோயிலுக்கு நேர்வீதியில் உள்ள சங்கு தீர்த்தக் குளக்கரையின் கோடியில் இடது புறத்தில் திரும்பும்போது உள்ள கரை வழியே கோடியில், வலது புறம் பிரியும் சாலையில் ஊரின் பகுதி காணப்படும். வீதியின் கோடியில் வலது புறத்தில் கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் உருத்திரன் கோயில், ருத்திரன் கோயில், ருத்ராங்கோயில் என்ற பெயர்களில் அழைக்கப்படுகின்றன. மிகப்பழமையான இக்கோவிலில் உள்ள இறைவன் – ருத்ரகோடீஸ்வரர், இறைவி – அபிராமசுந்தரி. இவ்விடத்தைத் தற்போது மக்கள் ‘ருத்ராங்கோயில்’ என்றழைக்கின்றனர். இறைவன் கிழக்கு நோக்கியும், இறைவி தெற்கு நோக்கியும் உள்ளார். இத்தலம் அப்பர் வாக்கில் இடம்பெற்றுள்ள தொண்டை நாட்டு வைப்புத் தலமாகும்.
புராண முக்கியத்துவம்
உருத்திரன் கோயில் – ருத்திரன் கோயில் என்பது மருவி, மக்கள் வழக்கில் ருத்திரான் கோயில் (ருத்ராங்கோயில்) என்று வழங்குகிறது. சிவபெருமானிடத்துத் தோன்றிய கோடி உருத்திரர்கள், காசிப முனிவரிடத்துத் தோன்றிய கோடி அசுரர்களை அழித்து, அப்பழி நீங்க இறைவனை வழிபட்ட தலம். ருத்திரர் கோடி வழிபட்டதால் ருத்ரகோடி என்று பெயர் பெற்றது. கோவிலுக்கு அருகில் குளம் ஒன்று உள்ளது. கருங்கல் திருப்பணி கொண்ட நீண்ட பெரிய கற்கோயில். இறைவன் – ருத்ரகோடீஸ்வரர், இறைவி – திரிபுரசுந்தரி என்று பழைய நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. அடிவாரக் கோயிலின் உள்ள அம்பாளின் பெயர் இது. ஆனால் இன்று பெயர் மாறி, அபிராமி நாயகி என்று கோயில் அறிவிப்புப் பலகையில் எழுதப்பட்டுள்ளது.
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
திருக்கழுக்குன்றம்
அருகிலுள்ள இரயில் நிலையம்
செங்கல்பட்டு
அருகிலுள்ள விமான நிலையம்
சென்னை