திருக்களப்பூர் திருக்கோடிவனதீஸ்வரர் சிவன்கோயில், அரியலூர்

முகவரி :
திருக்களப்பூர் திருக்கோடிவனதீஸ்வரர் சிவன்கோயில்
உடையார்பாளையம் வட்டம்,
அரியலூர் மாவட்டம்- 621805
இறைவன்:
திருக்கோடிவனதீஸ்வரர்
இறைவி:
காமாட்சியம்மன்
அறிமுகம்:
கும்பகோணம்- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பாப்பாகுடி தாண்டி சென்றதும் காடுவெட்டி நிறுத்தம் உள்ளது இங்கிருந்து ஆண்டிமடம் செல்லும் சாலையில் எட்டே கிமீ சென்றால் திருக்களப்பூர் தான். திருக்களப்பூர் கிராமம் சோழனின் வழியினர் கட்டிய கோவில், செம்பாறாங்கல் கொண்டு கட்டப்பட்டுள்ள கோயில். அகத்தியர் வழிபட்ட தளங்களில் இதுவும் ஒன்றாகும். ஆண்டிமடம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பஞ்சபூதங்களின் அம்சமாக ஐந்து சிவாலங்களை நிறுவியுள்ளார் ஆண்டிமடம்-விளந்தை, சிவலிங்கபுரம், – இதை அல்லேலுயாகாரனுங்க சிலுவைபுரமாக்கிட்டானுங்க கூவத்தூர் திருக்களப்பூர், அழகாபுரம். திருக்களப்பூர் பஞ்சபூதத்தில் ஆகாயத்தலமாக அழைக்கப்பட்டதால் இதனை மேலை சிதம்பரம் எனவும் அழைக்கின்றனர்.
கிழக்கு நோக்கிய கோவில், ராஜகோபுரமில்லை ஆனால் அதற்க்கான பெரும் கல்ஹாரம் அமைக்கப்பட்டுள்ளது. அதனை தாண்டியதும் கம்பீரமான நந்தி மண்டபம் பலிபீடம் உள்ளது. இறைவன்- திருக்கோடிவனதீஸ்வரர் கிழக்கு நோக்கியும், இறைவி- காமாட்சியம்மன் தெற்கு நோக்கியும் உள்ளனர். முகப்பு மண்டப வாயிலின் இருபுறமும் இரு விநாயகர்கள் உள்ளனர். கருவறை கோட்டத்தில் தென்முகன் சிறிய மடத்தில் உள்ளார். பிரகாரத்தில் விநாயகர், சில சிறிய லிங்கங்களுக்கு சன்னதிகள் உள்ளன. மதில் சுவற்றில் புருஷா மிருகம் சிவலிங்கத்தை பூஜிப்பது போல் உள்ளது. பெரிய கல்வெட்டு ஒன்று மதிலோரம் உள்ளது அதில் சுபானு வருடன் ஆனிமாதம்…. என தொடங்கும் வரிகள் உள்ளன. மேலை சிதம்பரமல்லவா நடராஜருக்கு என தனி சன்னதி, முகப்பு மண்டபம் ஆகியன உள்ளது அதன் கதவுகளில் தான் எத்தனை வேலைப்பாடுகள்!!
#”உயர்திரு கடம்பூர் விஜய் அவர்களின் அன்புகூர்ந்த அனுமதியோடு அவர்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது”.















காலம்
1500 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
திருக்களப்பூர்
அருகிலுள்ள இரயில் நிலையம்
அரியலூர்
அருகிலுள்ள விமான நிலையம்
மதுரை