திருக்கடையூர் ராமநந்தீஸ்வரர் சிவன்கோயில், நாகப்பட்டினம்
முகவரி
திருக்கடையூர் ராமநந்தீஸ்வரர் சிவன்கோயில் தரங்கம்பாடி வட்டம், நாகப்பட்டினம் மாவட்டம் – 609311
இறைவன்
இறைவன்: ராமநந்தீஸ்வரர்
அறிமுகம்
திருக்கடையூரின் பிரதான நெடுஞ்சாலையில் பேருந்து நிறுத்தம் அருகில் உள்ளது இந்த மேற்கு நோக்கிய சிவாலயம். பெரும்பாலான நேரங்களில் இக்கோயில் பூட்டப்பட்டே இருக்கும். இறைவன் மேற்கு நோக்கியும் இறைவி தெற்கு நோக்கியும் உள்ளனர். ராமர் வழிபட்ட லிங்கம் என்பதால் ராம நந்தி ஈஸ்வரர் என பெயர்.அதாவது ராமனுக்கு மகிழ்ச்சி அளித்த இறைவன் என பொருள். இறைவியின் பெயர் தெரியவில்லை. கோயிலின் மேல் விதானம் கூம்பு வடிவில் உள்ளது தற்போது விரிசல் விழுந்து காட்சியளிக்கிறது. சுற்றிவரும் வழி அடைந்து கிடக்கிறது அதனால் சண்டேசர் தரிசனம் கிடைக்கவில்லை. # ” உயர்திரு கடம்பூர் கே.விஜயன் அவர்களின் அன்புகூர்ந்த அனுமதியோடு அவர்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது”.
காலம்
500 – 1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
திருக்கடையூர்
அருகிலுள்ள இரயில் நிலையம்
மயிலாடுதுறை
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி