தியாகராஜபுரம் சிவன்கோயில், மயிலாடுதுறை
முகவரி
தியாகராஜபுரம் சிவன்கோயில், தியாகராஜபுரம் தெரு, முடிகண்டநல்லூர், மயிலாடுதுறை மாவட்டம் – 609 202
இறைவன்
இறைவன்: பிரத்யக்ஷ பரமேஸ்வரர்
அறிமுகம்
நதிக்கரைகள்தான் நாகரிகத்தின் தொட்டில்கள் என்பது வரலாறு கூறும் உண்மை. அப்படி சோழ தேசத்தில் காவிரிக் கரையில் நாகரிகம் தோன்றி, வளர்ந்ததற்கான சான்றுகள் ஏராளமாக காணப்படுகின்றன. அதுபோல் காவிரியில் ஏற்படும் வெள்ளத்தை கடலில் கொண்டு சேர்க்கும் வடிகாலாக விளங்கும் கொள்ளிடம் ஆற்றங்கரையிலும் தனித்து வளர்ந்த நாகரிகம் இருந்திருக்கிறது இருமருங்கிலும் உள்ள கரையோர மக்கள் சைவ வைணவ கடவுள்களை வணங்கி வாழ்ந்திருக்கின்றனர். காலப்போக்கிலும், வெள்ளங்களிலும் பாதிக்கப்பட்டு பல தலங்கள் மண்மேடாகிப்போனதும், அவ்வப்போது இறை வடிவங்கள் கண்டெடுக்கப்பட்டு பின்னர் வேறிடத்தில் வைக்கப்பட்டு ஆராதிக்கப்படவும் செய்யப்படுகின்றன. அப்படி கிடைத்த ஒரு லிங்க மூர்த்தியை நாம் தியாகராஜபுரத்தில் காணலாம். தியாகராஜபுரம் எங்கிருக்கு? மயிலாடுதுறை வட்டத்தில் உள்ளது மணல்மேடு எனும் கொள்ளிட தென்கரையோர கிராமம் உள்ளது, இந்த கிராமத்தின் பக்கம் உள்ள தென்கரையில் மேற்கு நோக்கி மூன்று கிமி தூரம் செல்வோமேயானால் இந்த தியாகராஜபுரம் அடையலாம். கோயில் என்று இன்று எதுவுமில்லை,உடனுறை தெய்வங்கள், பரிவார தெய்வங்கள் என எதுவும் இல்லை. இருப்பது ஒற்றை லிங்கம். அழகிய சதுர வடிவம் கொண்டது, காலம் என ஊகித்தால் ஆறாம் நூற்றாண்டுகளை சொல்லலாம். மானிடரை காக்க மீண்டும் வெளிவந்தவராதளால் இவ்விறைவனை பிரத்யக்ஷ பரமேஸ்வரர் என்றே அழைக்கலாம். பழமை வாய்ந்த இறைவடிவங்கள் மறுமை இலா பெருவாழ்வினை நமக்களிக்கும் தன்மை கொண்டவை. # ”உயர்திரு கடம்பூர் கே.விஜயன் அவர்களின் அன்புகூர்ந்த அனுமதியோடு அவர்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது”.
காலம்
1000 -2000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
தியாகராஜபுரம்
அருகிலுள்ள இரயில் நிலையம்
மயிலாடுதுறை
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி