தாராபுரம் சிவன்கோயில், திருப்பூர்
முகவரி
தாராபுரம் சிவன்கோயில், ஆதீஈசன் தெரு, தில்லைவரயம்மன் கோவில் அருகில், தாராபுரம், திருப்பூர் மாவட்டம் – 638661.
இறைவன்
இறைவன்: சிவன்
அறிமுகம்
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் ஆற்றின் கரை ஒரம் உள்ளது இந்தக் கோயில் மத்துவகுல மகான் வியாசராஜர் காலத்தில் ஸ்தாபிக்கபட்டது. . இந்த கோயிலுக்கு 15ஏக்கர் நன்செய் நெல் விளையும் பூமி உள்ளது . இப்போது கோயில் முற்றிலும் பாழடைந்துள்ளது. இந்த சிவா கோயிலின் அடித்தளம் மூழ்கி மணலில் புதைக்கப்பட்டுள்ளது. கோயிலைச் சுற்றி மரங்கள் வளர்ந்து வருகின்றன, கிளைகள் கோயிலுக்குள் முழுவதும் பரவி உள்ளன. மூலவராக சிவன் உள்ளார். வேறு எந்த மூர்த்தங்களும் இல்லை. இந்த கோயில் நிலத்திற்க்கு நடுவே மையமாக உள்ளது. ஆதலால் கிராம மக்கள் யாரும் இக்கோவிலை கவனிப்பதில்லை. வேறு எந்த பூஜைகளும் இங்கு நடத்தப்படவில்லை. இந்த சிவன் கோயில் அமராவதி நதிக்கு அருகில் உள்ளது.
காலம்
1000 to 2000
அருகிலுள்ள பேருந்து நிலையம்
தாராபுரம்
அருகிலுள்ள இரயில் நிலையம்
திருப்பூர்
அருகிலுள்ள விமான நிலையம்
கோயும்பத்தூர்