சூரமங்கலம் அகத்தீஸ்வரர் சிவன்கோயில், நாகப்பட்டினம்

முகவரி :
சூரமங்கலம் அகத்தீஸ்வரர் சிவன்கோயில்,
சூரமங்கலம், திருக்குவளை வட்டம்,
நாகப்பட்டினம் மாவட்டம் – 610207.
இறைவன்:
அகத்தீஸ்வரர்
இறைவி:
அகிலாண்டேஸ்வரி
அறிமுகம்:
திருவாரூர் – திருத்துறைப்பூண்டி சாலையில் 15வது கிமீ ல் உள்ள பாங்கல் நாலு ரோட்டில் இருந்து கொளப்பாடு சாலையில் ½ கிமீ சென்றால் சூரமங்கலம் சிவன் கோயில் அடையலாம். ஒரு குளத்தின் கரையில் தென்னை மரங்கள் அடர்ந்த தெருவில் உள்ளது கோயில்.
கிழக்கு நோக்கிய கோயில், பிரதான வாயில் தென்புறம் உள்ளது. அகத்தியர் பூஜித்த தலங்களில் இந்த சூரமங்கலமும் ஒன்று அதனால் இறைவன் அகத்தீஸ்வரர் எனப்படுகிறார். சதுரபீடம் கொண்டு கிழக்கு நோக்கி உள்ளார். இறைவி அகிலாண்டேஸ்வரி தெற்கு நோக்கியுள்ளார். கோயில் முற்றிலும் செங்கல் கொண்டு கட்டப்பட்டு உள்ளது. பழமையான பாணியில் அழகாக அமைதியாக உள்ளது. இறைவன் எதிரில் உள்ள முகப்பு மண்டபத்தில் சிறிய நந்தியும் மண்டபத்தின் வெளியில் ஒரு சிறிய நந்தியும் உள்ளனர். நடராஜர் சன்னதியும் உள்ளது.
கருவறை கோஷ்டங்களில் தென்முகன் லிங்கோத்பவர் பிரம்மன் துர்க்கை உள்ளனர். சண்டேசர் தனி சன்னதியில் தியானத்தில் உள்ளார். வடகிழக்கு பகுதியில் நவக்கிரக மண்டபமும், பைரவருக்கு சிறிய சன்னதியும் உள்ளது. அம்பிகை சன்னதியை ஒட்டி சில நாகர்கள் உள்ளனர். சிறிய கோயிலாக இருந்தாலும் முறையாக பூஜைகள் நடைபெறுகின்றன. இக்கோயிலின் பரம்பரை அறங்காவலர்களாக உள்ளனர்.









காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
சூரமங்கலம்
அருகிலுள்ள இரயில் நிலையம்
நாகப்பட்டினம்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி