சுந்தரபெருமாள்கோயில் ஐயாறப்பர் சிவன்கோயில், தஞ்சாவூர்
முகவரி :
சுந்தரபெருமாள்கோயில் ஐயாறப்பர் சிவன்கோயில்,
சுந்தரபெருமாள்கோயில், பாபநாசம் வட்டம்,
தஞ்சாவூர் மாவட்டம் – 614207.
இறைவன்:
ஐயாறப்பர்
இறைவி:
அறம்வளர்த்த நாயகி
அறிமுகம்:
சுந்தரபெருமாள் கோவில் ஒரு கோயிலின் பெயரே ஊர் பெயராக மருவி நின்ற அதிசயம். கும்பகோணத்திலிருந்து – தஞ்சை செல்லும் சாலையில் 9 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.
ஒரு ரிஷியால் சபிக்கப்பட்ட இந்திரன் நோய்வாய்ப்பட்டான். சாபத்தில் இருந்து விடுபட ஐயாறும் பாயும் சுந்தர பெருமாள் கோயிலில் உள்ள வன்னி மரத்தடியில் லிங்கபூஜை மேற்கொண்டான். பூஜையின் நிறைவாக அவர் பிராமணர்களுக்கு பூசணிக்காயை தானம் செய்ய இருந்தார், ஆனால் ஒரு பிராமணரைக்கூட பார்க்கமுடியவில்லை, அப்போது இத்தலத்தில் குடிகொண்டிருந்த விஷ்ணு பிராமணனாக உருமாற்றிக்கொண்டு வந்து இந்திரன் முன் தோன்றினார் பின்னர், விஷ்ணு பகவான் இந்திரனுக்கு சௌந்தரராஜப் பெருமாளாக தரிசனம் அளித்து அவனுடைய சாபத்தைப் போக்கினார். இதனால் நன்றி செலுத்தும் விதமாக இந்திரன் இந்தக் கோயிலைக் கட்டினான் என்பது வரலாறு.
இத்தலம் நாமாஸ்தீக புண்ணிய ஸ்தலம் என்று அழைக்கப்படுகின்றது. அன்று இந்திரன் அமைத்த லிங்கம் தான் இந்த ஐயாறப்பர் எனப்படுகிறது. சுந்தரபெருமாள் கோயிலில் இருந்து தெற்கில் உள்ள நல்லூர் செல்லும் சாலையில் ஓடும் திருமலை ராஜன் ஆற்றின் தென் கரையில் ஒரு கோயிலும் வடகரையில் ஒரு கோயிலும் உள்ளன. ஆற்றை தாண்டுவதற்கு முன் வலதுபுறம் சிறிய சாலையோர கோயிலாக உள்ளது இந்த ஐயாரப்பர் கோயில்.
திருவையாற்றை போலவே இங்கும் இறைவன்- ஐயாறப்பர் இறைவி – அறம்வளர்த்த நாயகி கிழக்கு நோக்கிய சிறிய கோயில் இறைவன் சிறிய லிங்க மூர்த்தியாக உள்ளார், எதிரில் சிறிய நந்தி உள்ளது. அவரது கருவறை வாயிலில் சிறிய சனிபகவான் உள்ளார். தெற்கு நோக்கிய சிறிய சன்னதியில் அம்பிகை குடிகொண்டுள்ளார். அடுத்த கரையில் சிறிய தகர கொட்டகையில் ஒரு லிங்க பாணமாக இருந்து அருள்பாலிக்கிறார் இறைவன். இவரின் பழங்கோயில் என்னவானது என அறியமுடியவில்லை.
”உயர்திரு கடம்பூர் விஜய் அவர்களின் அன்புகூர்ந்த அனுமதியோடு அவர்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது”
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
சுந்தரபெருமாள்கோயில்
அருகிலுள்ள இரயில் நிலையம்
பாபநாசம்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி