சீர்காழி பிடாரி அம்மன் (கழுமலையம்மன் திருக்கோயில், மயிலாடுதுறை
முகவரி :
சீர்காழி பிடாரி அம்மன் (கழுமலையம்மன்) திருக்கோயில்,
சீர்காழி,
மயிலாடுதுறை மாவட்டம் – 609110.
இறைவி:
பிடாரி அம்மன் (கழுமலையம்மன்)
அறிமுகம்:
சீர்காழி பெரிய கோயிலின் வடக்கில் உள்ள பிடாரி வடக்கு வீதியில் சிறிய சந்து ஒன்றில் உள்ளது இந்த அருள்மிகு கழுமலையம்மன் ஆலயம். இந்தக் கோயில் வடக்கு திசை நோக்கி அமைந்துள்ளது. முகப்பில் மொட்டைக் கோபுரம், அதில் சப்த கன்னிகள் சுதைகள் உள்ளன. அதையடுத்து பலிபீடம். அடுத்து வேதாளத்தம்மன், கழுமலையம்மனைப் பார்த்தபடி தனி சந்நிதியில் இருக்கிறார்.இவற்றைத் தாண்டினால் அழகிய சிறு மண்டபம், அந்த மண்டபத்தின் உள்ளே கழுமலையம்மன் வடதிசை நோக்கி அமர்ந்திருக்க, மண்டபத்தின் இடது புறம் பிள்ளையார், அசுவத்தாமர், வல்லப கணபதி ஆகியோரின் சிலைகள் உள்ளன. அருகே சண்டிகேசுவரியின் சிலை உள்ளது. கழுமலையம்மன் மண்டபத்தில் தனித்து இருக்கிறார்.
கருவறையில் ஏழு கன்னிகளின் சிலைகள் உள்ளன. கருவறையில் இடதுபுறம் குருவும், வலதுபுறம் விநாயகர் சிலைகளும் உள்ளன. சீர்காழியின் காவல் தெய்வமாகிவிட்ட இந்தப் பிடாரி அம்மனாகிய கழுமலை அம்மனுக்கு சித்ரா பௌர்ணமிக்கு முன் வரும் அமாவாசை முதல், 10 நாட்கள் காப்பு கட்டி திருவிழா நடைபெறும். காப்பு கட்டும் நாளன்று இந்த ஊர் எல்லைக்கு உட்பட்ட வீடுகளில் கர்ப்பிணிப் பெண்கள் தங்குவதைத் தவிர்த்து விடுகின்றனர். காப்பு கட்டிய நாள் முதல் தினசரி இரவு நான்கு வீதிகளிலும் ஆரவார ஒலியுடன் வீதியுலா வருவது நடக்கிறது. இந்தக் கோயிலின் திருவிழா முடிந்த பின்னரே சீர்காழி பிரம்மபுரீஸ்வரர் கோயிலின் திருவிழா தொடங்குகிறது.
காலம்
800 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
சீர்காழி
அருகிலுள்ள இரயில் நிலையம்
சீர்காழி
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி