சிம்மாசலம் திரிபுராந்தகேஸ்வரர் திருக்கோயில், ஆந்திரப்பிரதேசம்
முகவரி
சிம்மாசலம் திரிபுராந்தகேஸ்வரர் திருக்கோயில், சிம்மாசலம், விசாகப்பட்டினம் (வழி) ஆந்திரப்பிரதேசம் – 5300238.
இறைவன்
இறைவன்: திரிபுராந்தகேஸ்வரர்
அறிமுகம்
ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்திற்குப் பக்கத்தில் 19 கி.மீ. தொலைவில் உள்ள ‘சிம்மாசலம்’ என்னும் தலத்தில் மலைமீது கோயில் உள்ளது. இதுவே அப்பர் பெருமான் கூறும் வைப்புத் தலமாக இருக்கலாம் என்பர். மலைமேல் வராக லட்சுமி நரசிம்மர் கோயில் உள்ளது. அதன் பக்கத்தில் இச்சிவாலயம் உள்ளது. இஃது சிறிய கோயில். விஜயவாடா – ஸ்ரீ சைலம் வழியில் திரிபுராந்தகேஸ்வரர் கோயில் என்னும் பெரிய சிவாலயம் ஒன்றுள்ளது. இதை ஸ்ரீ சைலத்தின் தெற்கு முகத்துவாரம் என்று கூறுவர். இவ்வூருக்கு திரிபுராந்தகம் என்றே பெயர்.
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
நிர்வகிக்கப்படுகிறது
இந்து சமய அறநிலையத் துறை
அருகிலுள்ள பேருந்து நிலையம்
சிம்மாசலம்
அருகிலுள்ள இரயில் நிலையம்
விசாகப்பட்டினம்
அருகிலுள்ள விமான நிலையம்
விசாகப்பட்டினம்