Friday Nov 22, 2024

சின்ன வடவாடி அருணாசலேஸ்வரர் சிவன்கோயில், கடலூர்

முகவரி

சின்ன வடவாடி அருணாசலேஸ்வரர் சிவன்கோயில், சின்ன வடவாடி, விருத்தாசலம் வட்டம், கடலூர் மாவட்டடம் – 606 003.

இறைவன்

இறைவன்: அருணாசலேஸ்வரர்

அறிமுகம்

விருத்தாசலத்தின் வடக்கில் செல்லும் உளுந்தூர்பேட்டை சாலையில் ஐந்தாவது கிமி ல் உள்ளது பெரியவடவாடி இந்த ஊருக்கு சற்று முன்னதாக வடவாடி ஏரியை ஒட்டி இடதுபுறம் பிரியும் சிறிய சாலையில் இரண்டு கிமி சென்றால் வருவது சின்ன வடவாடி கிராமம், இங்குள்ள தொடக்கப்பள்ளியின் நேர் பின்புறத்தில் ஒரு பெரிய வயல் நடுவில் உள்ளது இந்த சிவன் கோயில். வடவாடிஏரியின் மேற்கு கரை தான் இந்த கிராமம், அருகில் உள்ள விருத்த -அசலம் போல் இந்த இறைவன் அருண அசலம் எனும் அருணாசலேஸ்வரர். கிழக்கு நோக்கி பல காலம் வெட்டவெளியில் இருந்தவருக்கு அன்பர்கள் ஒன்று சேர்ந்து அழகிய பெரிய கொட்டகை ஒன்றை கட்டியுள்ளனர். இறைவன் அழகான லிங்க திருமேனியனாக கிழக்கு நோக்கியுள்ளார், எதிரில் நந்தி, பலிபீடம் தென்மேற்கில் விநாயகனும், வடமேற்கு மூலையில் சுப்ரமணியரும், வடகிழக்கில் நவக்கிரக தொகுப்பும் உள்ளன. சன்னதி முழுதும் வண்ண தட்டோடுகள் பதித்து அழகு செய்துளள்னர். # ” உயர்திரு கடம்பூர் கே.விஜயன் அவர்களின் அன்புகூர்ந்த அனுமதியோடு அவர்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது”.

காலம்

1000 – 2000 ஆண்டுகள் பழமையானது

அருகிலுள்ள பேருந்து நிலையம்

சின்ன வடவாடி

அருகிலுள்ள இரயில் நிலையம்

விருத்தாசலம்

அருகிலுள்ள விமான நிலையம்

பாண்டிச்சேரி

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top